தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஐஆர்சிடிசி இணையத்தளம் ஒரு மணி நேரத்திற்கு இயங்காது என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ள நிலையில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு.
மீண்டும் முடங்கிய IRCTC இணையத்தளம்:
இந்திய ரயில்வேயின் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தளமான இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) இன்று காலை மீண்டும் முடங்கியது. இதன் காரணமாக காலை 10 மணிக்கு ஏ.சி தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய காத்திருந்த பயணிகள் அவதி அடைந்தனர். மேலும் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: VJ Chithra : காலையிலேயே அதிர்ச்சி! VJ சித்ரா தந்தை தற்கொலை! மகளின் துப்பட்டாவில் பிரிந்த உயிர்..
அவதியடைந்த பயணிகள்:
புதுவருடம் மற்றும் பள்ளி விடுமுறை காலம் என்பதால் பொதுமக்கள் வெளியூர்களுக்கு செளகரியமாக குடும்பத்துடன் செல்ல ரயில் பயணத்தையே மக்கள் விரும்புவர். இந்த நிலையில் இன்று காலை தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரத்தில் ஐஆர்சிடிசி இணையத்தளம் மீண்டும் முடங்கியது. இதனால் டிக்கெட் முன்பதிவு செய்ய காத்திருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினார். இதனால் பயணிகள் உடனடியாக இது குறித்து தங்கள் சமூக வலைதளப்பக்கங்களில் பதிவிட தொடங்கியுள்ளனர்.
மேலும் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு எந்த விதமான டிக்கெட் முன்பதிவையும் செய்ய முடியாது என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி, டிசம்பர் 26 ஆம் ஆகிய நாட்களில் இதே போல ஐஆர்சிடிசி இணையத்தளம் முடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஆர்சிடிசி வலைத்தளத்தில் தொடர்ந்து இதே போல நடைப்பெறுவதால் இணையத்தளத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: Adani TNEB Tender: திடீரென ரத்தான அதானி டெண்டர்! அதிரடி காட்டிய தமிழக அரசு... காரணம் என்ன?