மூத்த முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மரணமடைந்த நிலையில், நேற்று நள்ளிரவே அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.


ராகேஷ் ஜுன்ஜுன்வாலா


"இந்தியாவின் வாரன் பஃபட்" என்று அழைக்கப்பட்ட இவர் தொட்டதெல்லாம் தங்கமாக மாறும் என்று புகழப்பட்டவர். வணிகர் மற்றும் பட்டயக் கணக்காளர் (CA), மற்றும் நாட்டின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான அவர், ஆகாசா ஏர் வெளியீட்டு விழாவில் கடைசியாக பொதுவெளியில் காணப்பட்டார். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின்படி இவரின் சொத்து மதிப்பு $5.8 பில்லியன் ஆகும். முதலீடுகளை தனது முதன்மையான வருமான ஆதாரமாக கொண்டு சுயமாக உருவானவர் இவர்.


தொடர்புடைய செய்திகள்: Patriotic Songs Tamil: வந்தே மாதரம்... தாயின் மணிக்கொடி...தேசப்பற்றுக்கான டாப்-10 தமிழ் பாடல்கள்..!



இவரது நிறுவனங்கள்


ஜுன்ஜுன்வாலா ஹங்காமா மீடியா மற்றும் ஆப்டெக் ஆகிய நிறுவனங்களின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி வைஸ்ராய் ஹோட்டல்ஸ், கான்கார்ட் பயோடெக், ப்ரோவோக் இந்தியா மற்றும் ஜியோஜித் ஃபைனான்சியல் சர்வீசஸ் ஆகியவற்றின் இயக்குநராகவும் இருந்தார்.


தொடர்புடைய செய்திகள்: Independence Day 2022 Wishes: 75-வது சுதந்திர தினம்: வாழ்த்துகள், புகைப்படங்கள், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் இங்கே..!


ஜுன்ஜுன்வாலா மரணம்


இவர் நேற்று காலை 6:45 மணியளவில் கேண்டி ப்ரீச் மருத்துவமனைக்கு கொண்டு செலப்பட்டுள்ளார். உடனடியாக அங்கேயே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவர் சிறுநீரகம் உட்பட பல உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டது. ஏற்கனவே உடல்நலக்குறைவுடன் இருந்ததாகவும், சில வாரங்களுக்கு முன்புதான் சிகிச்சைகள் முடிந்து அதே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் தகவல் தெரிவித்தனர்.



தொடர்புடைய செய்திகள்: 3 வருஷம் ஜெயில்தான்! தேசியக்கொடி ஏற்றும்முன் இதிலெல்லாம் கவனம் தேவை! முழு விவரம்!


உடல் தகனம்


ஜுன்ஜுன் வாலா மறைந்த நிலையில், அவரது உடல் தகனம் செய்யப்படுவதற்காக இரவு 11 மணி அளவில், மும்பையில் உள்ள பங்கங்கா உடல் தகன மேடைக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அவருக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. அதன் பிறகு அங்கு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. நேற்று மாலை 5.30 மணிக்கே உடல் தகனம் செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில், ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் சகோதரரர் துபாயில் இருந்து வர தாமதம் ஆனதால், நள்ளிரவில் தகனம் செய்யப்படவேண்டிய சூழல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று இவரது மறைவிற்கு பல பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் கார்ப்பரேட் தொழில் அதிபர்கள் இரங்கல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.