ட்விட்டர் தளத்தில் ஆனந்த் மஹிந்திரா அவ்வப்போது சில நல்ல வீடியோக்களை பகிர்ந்து தன்னுடைய கருத்தை பதிவு செய்வார். அந்த வீடியோக்கள் பலரையும் அதிகம் கவரும். அந்த வகையில் தற்போது அதே மாதிரியாக வீடியோ ஒன்றை அவர் மீண்டும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஒருவர் செய்யும் செயல் பலரையும் நிச்சயமாக கவரும் வகையில் அமைந்துள்ளது. அத்துடன் அதை பார்த்தால் நாம் வாய் அடைத்து போகும் வகையில் அமைந்துள்ளது.
அதன்படி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் தலையின் மீது சுமார் 30 செங்கல்களுக்கு மேலே சுமந்து செல்வது போல வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த செங்கலை அந்த நபர் தன்னுடைய தலையில் இருந்து கீழே விழாதபடி எடுத்து செல்வது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ பதிவுடன் அவர், "இந்த மாதிரியான ஆபத்தான வேலையை யாரும் செய்ய கூடாது. இருப்பினும் இந்த நபரின் திறமையை பார்த்து நான் மிகவும் வியந்துள்ளேன். இந்த வீடியோ எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது என்று எனக்கு தெரியவில்லை. அந்த இடத்தை கண்டறிந்து அவருடைய முதலாளியை இந்த வேலைக்கு ஒரு இயந்திரத்தை பயன்படுத்த சொல்லுங்கள்" எனக் கூறியுள்ளார்.
இந்த ட்விட்டர் பதிவை 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தற்போது வரை பார்த்துள்ளனர். அத்துடன் 15ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். மேலும் பலரும் அந்த நபரின் திறமையை பாராட்டி வருகின்றனர். இந்த நபர் இவ்வளவு அழகாக இந்த செங்கலை தூக்குவதற்கு பின்னால் எவ்வளவு உடல் உழைப்பு உள்ளது என்றும் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.
முன்னதாக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக மைசூரு மசாலா தோசை தொடர்பாக ஆனந்த் மஹிந்திரா ஒரு பதிவை செய்திருந்தார். அந்தப் பதிவு மிகவும் வைரலானது. அந்த பதிவில், "ஒருவர் அவ்வளவு சிறப்பாக தோசை சுடுகிறார். அத்துடன் அந்த தோசையை அவர் சிறப்பாக தனி தனியாக எடுத்து தட்டில் ஸ்டைலாக போடுகிறார். அவர் தோசை சுட்டுத்தரும் அழகை பார்த்தால் தோசை பிடிக்காதவர்கள் கூட தோசையை சாப்பிட தோன்றும் வகையில் அமைந்திருந்தது.
மேலும் படிக்க: 'வெளிய வாடா திருட்டுப் பயலே' : செல்ல நாய் செய்யும் சேட்டை.. வைரல் வீடியோ !