சமூக வலைதளத்தில் செல்ல பிராணிகள் தொடர்பாக எந்த ஒரு வீடியோவாக இருந்தாலும் அது எளிதாக வைரலாகும். அதிலும் குறிப்பாக அந்த செல்ல பிராணி செய்யும் சேட்டை என்றால் அந்த வீடியோ ட்ரெண்டாகியே தீரும். அந்தவகையில் தற்போது ட்விட்டரில் ஒரு நாய் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாக காரணம் என்ன?


ட்விட்டரில் ஒருவர் நாய் ஒன்று வீட்டில் தனியாக இருக்கும் போது செய்யும் சேட்டை தொடர்பான வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் அந்த நாய் வீட்டில் தனியாக இருக்கும் போது நாற்காலியை எடுத்து கிட்சன் மேடை அருகே போட்டு அங்கு இருக்கும் உணவை திருட்டுத்தனமாக சாப்பிடுகிறது. இந்த சேட்டைதான் அந்த வீடியோ பதிவில் இடம்பெற்றுள்ளது. 






இந்த வீடியோவை தற்போது வரை 3 மில்லியனிற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்து உள்ளனர். அத்துடன் 1.6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். மேலும் பலர் இந்த நாய் தொடர்பாக ஆச்சரியமாக தங்களது கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக சிலர் இந்த காட்சிகள் எவ்வளவு அழகாக உள்ளது என்று பதிவிட்டுள்ளனர். 


 This is the funniest video of a very smart dog that I have seen in a long time. The dog is a genius and knows how to get what he wants.


— janis frank (@janisfrank10) August 18, 2021













இவ்வாறு பலரும் ட்விட்டரில் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 


மேலும் படிக்க: சிறந்த நடிகர் சூர்யா.. விருதுகளை குவித்த சூரரை போற்று!