இந்தியாவின் நட்பு மிந்த நாடுகளில் ஒன்றாக மலேசியா திகழ்கிறது. மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் 3 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். இந்தியா வந்துள்ள அவருக்கு சிறப்பான வரவேற்பை இந்திய அதிகாரிகள் அளித்தனர்.


மலேசிய பிரதமரை கட்டியணைத்து வரவேற்ற இந்திய பிரதமர்:


இந்த நிலையில், இந்திய பிரதமர் மோடியை மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் சற்று முன் சந்தித்தார். டெல்லியில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மலேசிய பிரதமரை பார்த்த பிரதமர் மோடி அவர் அருகில் வருவதற்கு சில அடி தூரம் முன்பே தனது இரு கைகளையும் நீட்டி தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவரை கட்டியணைக்கும் விதமாக தயாராக சென்றார்.






மலேசிய பிரதமரும் மோடியைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியுடன் புன்முறுவல் சிரிப்புடன் வந்தார். அப்போது அவரை கட்டியணைத்து தனது மகிழ்ச்சியை பிரதமர் மோடி வெளிப்படுத்தினார். இவர்கள் இருவருடைய சந்திப்பு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடிக்கும் பெரும்பாலான உலகத் தலைவர்களுக்கும் இடையே நெருக்கமான நட்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


முக்கிய பேச்சுவார்த்தை:


3 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள மலேசிய பிரதமர் மோடி பல்வேறு பொருளாதார மற்றும் அரசியல் பேச்சுவார்த்தைகளை பிரதமர் மோடியுடன் நடத்தினார். மேலும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ரவிசங்கர் மற்றும் பல உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்த மலேசிய பிரதமர் இரு நாட்டு உறவுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார்.


மலேசிய பிரதமரின் இந்த இந்திய பயணத்தின்போது இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்ட பலவற்றிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தகளும் கையெழுத்தாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க: வாய்ப்புக்கு அட்ஜஸ்ட்மென்ட்.. கழிவறை கூட இல்ல.. மலையாள சினிமாத்துறையை தோலுரித்த ஹேமா கமிஷன்!


மேலும் படிக்க:Doctor Death: இழப்பீடு வேண்டாம்.!: கொல்கத்தா மருத்துவ மாணவியின் பெற்றோர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன?