கடந்த ஜூலை 10-ஆம் தேதி நள்ளிரவு, இந்தியக் கடலோரக் காவல்படையினர் இரண்டு படகுகளில் சிக்கியிருந்த 16 மீனவர்களை மீட்டனர். காக்கிநாடாவில் இருந்து சுமார் 70 கிமீ தொலைவில் உள்ள ONGC எண்ணெய் கிணறு அருகே இயந்திரக் கோளாறு காரணமாக படகுகள் மிதந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. 




பின்னர், பணியாளர்கள் அனைவரும் கடலோர காவல்படை தடுப்பு படகு மூலம் வெளியேற்றப்பட்டு காக்கிநாடாவில் உள்ள மாநில அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.




கடலில் மீனவர்கள் சிக்கி கொள்வதும் அவர்களை கடற்படையினர் காப்பாற்றுவதும் தொடர் கதையாகி வருகிறது. மீனவர்களின் ஒரே வாழ்வாதாரம் மீன்பிடி தொழிலாகவே உள்ளது. அதிலிருந்து வரும் பணத்தை வைத்தே அவர்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.






இச்சூழலில், இயற்கை பேரழிவு காரணமாக மீனவர்கள் கடலில் சிக்கி கொள்வது அவர்களை பெரும் துயரத்திற்கு இட்டு செல்கிறது. எனவே, அவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு அவர்கள் கடலில் சிக்கும் பட்சத்தில் அவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண