மத்திய ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், திருமதி ஷைனா என்சியை சந்தித்து, பைகுல்லா ரயில் நிலையம் பாரம்பரிய மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பிற்கான யுனெஸ்கோ ஆசிய-பசிபிக் விருதை வென்றதற்காக அவரது குழு மற்றும் மத்திய ரயில்வேக்கு வாழ்த்து தெரிவித்தார்.


பைகுல்லா ரயில் நிலையம்


பைகுல்லா ரயில் நிலையம், 1853 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மத்திய ரயில்வேயின் 169 ஆண்டுகள் பழமையான ரயில் நிலையம், அதன் பாரம்பரிய கட்டடக்கலை பெருமையை மீட்டெடுப்பதற்காகவும் கலாச்சார பாரம்பரிய மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பிற்காகவும் யுனெஸ்கோவின் ஆசிய-பசிபிக் விருதைப் பெற்றுள்ளது. ஜூலை, 2019 இல், இந்தியாவின் பழமையான ரயில் நிலையங்களில் ஒன்றான பைகுல்லா ரயில் நிலையத்தின் பண்டைய பாரம்பரிய கட்டிடக்கலையை மீட்டெடுப்பதற்கான ஒரு பெரிய திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் இந்தியன் ரயில்வேயின் ஒருங்கிணைப்பில், ஐ லவ் மும்பை டிரஸ்ட்டியான ஷைனா என்சி, பஜாஜ் டிரஸ்ட் குரூப்ஸ் மற்றும் அபா நரேன் லம்பா அசோசியேட்ஸ் ஆகியோரின் முயற்சியுடன் தொடங்கப்பட்டது.



பல குழுமங்கள் இணைந்து செய்த செயல்


பஜாஜ் குழுமத்தின் மினல் பஜாஜ் மற்றும் நிராஜ் பஜாஜ் ஆகியோர் ரூ.4 கோடிக்கு மேல் இந்த மிகப்பெரிய மறுசீரமைப்பு திட்டத்திற்கு நிதியளித்தனர். பாரம்பரிய பாதுகாப்பு கட்டிடக்கலைஞர் அபா நரேன் லம்பா, மும்பை நகரத்தை கௌரவிக்கும் வகையில் அவர்களின் CSR முன்முயற்சியாக இந்த திட்டத்தை செயல்படுத்த மனதார ஒப்புக்கொண்டார். முழு திட்டமிடல் மற்றும் செயல்பாட்டின் பணி நிறைவடைந்து, பைகுல்லா ரயில் நிலையம் அதன் அசல், பழமையான, பாரம்பரிய கட்டிடக்கலைக்கு திரும்பியது.


தொடர்புடைய செய்திகள்: Finance Minister On Loan: கடனை திரும்பப் பெற மோசமாக நடந்து கொள்ளக் கூடாது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை


புதுப்பிக்கப் பட்டபின் திறப்பு விழா


29.4.2022 அன்று இந்திய அரசின் ரயில்வே இணை அமைச்சர் ராவ்சாகேப் தாதாராவ் பாட்டீல் தன்வே புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், ஐ லவ் மும்பையின் அறங்காவலர் ஷைனா NC, பஜாஜ் குழுமத்தின் மினல் பஜாஜ் மற்றும் நிராஜ் பஜாஜ், பாரம்பரிய பாதுகாப்பு கட்டிடக் கலைஞர் அபா நரேன் லம்பா, தற்போதைய ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் லஹோட்டி (அப்போதைய மத்திய ரயில்வே பொது மேலாளர்), துறைகளின் முதன்மைத் தலைவர்கள் மற்றும் மத்திய ரயில்வேயின் பிற மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.



பின்வரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன



  • பிளாட்ஃபார்ம் எண் 1 இன் பிரதான நுழைவு/முகப்பை அழகுபடுத்துதல் - மறுசீரமைப்பு, விளக்குகள் போன்றவை

  • பிளாட்ஃபார்ம் எண் 1-ன் வெளியேறும் பாதை மேம்படுத்தப்பட்டு அழகுபடுத்தப்பட்டது - (தாதர் எண்ட்)

  • முகப்பில் உள்ள தோட்டப் பகுதி மேம்படுத்தப்பட்டு அழகுபடுத்தப்பட்டது

  • அனைத்து சுவர்கள், கிரில்கள், நடை மேம்பாலங்கள் மறுசீரமைப்பு

  • பொது மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகளை புதுப்பித்தல்

  • தண்ணீர் டேங்க்-களை மேம்படுத்துதல்/அழகுபடுத்துதல் - அனைத்து பிளாட்பாரத்திலும் தலா இரண்டு

  • பெஞ்சுகளின் மறுசீரமைப்பு மற்றும் மேம்படுத்தல்

  • ரயில் நிலையத்தின் LED விளக்குகளை பாரம்பரிய முறையிலேயே புதுப்பித்தல்

  • நடை மேம்பாலங்களுக்கு மீண்டும் வண்ணம் தீட்டுதல் மற்றும் அழகுபடுத்துதல்

  • பாரம்பரிய கூரை மறுசீரமைப்பு

  • பெண்களுக்கான தனி கழிப்பறை மற்றும் அலுவலகங்கள்/கடைகளின் முகப்பை ஒழுங்குபடுத்துதல்/புனரமைத்தல்.


இந்த புனரமைப்பு பணிகள் முடிந்து இன்று பைகுல்லா நிலையம் வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் சின்னமாகவும் அதே நேரத்தில் மிக நவீன வசதிகளுடன் கூடிய ரயில் நிலையமாகவும் பெருமையுடன் நிற்கிறது.