பிறந்த குழந்தைகள் மற்றும் 2 வயதுடைய குழந்தைகளுக்கு பால் அல்லது திட உணவுகள் 24 மணி நேர கால இடைவெளியில் கிடைக்காமல் தவிக்கும் குழந்தைகளை ’ஜீரோ புட்’ குழந்தைகள் என்று ஆய்வாளர்கள் அழைக்கின்றனர். 


ஜீரோ புட் குழந்தைகள்:


ஜீரோ புட் நிலையில் தவிக்கும் குழந்தைகள் குறித்து குறைந்த வருவாய் மற்றும் நடுத்தர வருவாய் உள்ள மக்களை அதிகம் கொண்ட 92 நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த எஸ்.வி.சுப்ரமணியன் இந்த ஆய்வை மேற்கொண்டார். இவருடன் அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஓமர் கார்ல்சன், கொரியாவைச் சேர்ந்த ராக்லி கிம் ஆகியோர் ஆய்வை மேற்கொண்டனர்.


இவர்கள் நடத்திய ஆய்வறிக்கையை ஜமா நெர்வொர்க் எனும் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கான பதிப்பில் வெளியானது.  அந்த ஆய்வில், தெற்கு ஆசியாவில்  24 மணி நேர கால இடைவெளியில் உணவு இல்லாமல் அதிக குழந்தைகள் தவித்து  வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவின் நிலை என்ன?


மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கினியா, பெனின், லைபீரியா, மாலி, இந்தியாவில் அதிகப்படியான எண்ணிக்கையில் உணவின்றி குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது.   கினியாவில் 21.8 சதவீதம், மாலியில் 20.5 சதவீதம், இந்தியாவில் 19.3 சதவீத குழந்தைகள் உணவின்றி இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கினியா, மாலிக்கு அடுத்தப்படியாக இந்தியாவில் 24 மணி நேர கால இடைவெளியில் குழந்தைகள் உணவின்றி தவித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேபோல, குறைவான எண்ணிக்கையில் பங்களாதேஷ், பாகிஸ்தான்  போன்ற நாடுகளில் உணவின்றி குழந்தைகள் இருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பங்களாதேஷில் 5.6 சதவீதமும், பாகிஸ்தானில் 9.2 சதவீதமும், காங்கோவில் 7.4 சதவீதமும்,  எத்தியோப்பியாவில் 14.8 சதவீத மத்திப்பில் குழந்தைகள் உணவின்றி இருக்கின்றன.  இந்த ஆய்வின்படி, குழந்தைகள் உணவின்றி தவிக்கவில்லை என்றும், தாய்மார்கள் குழந்தைகள் உணவை வழங்காமல் இருப்பதாக தெரியவந்துள்ளது.


அதாவது, கிராமபுறம் மற்றும் நகர்ப்புறங்களில் பொருளாதாரத்தில் நலிவடைந்த நிலையில் வாழும் பெண்கள், தினசரி கூலி வேலைகள் செய்து கொண்டும், அன்றாட குடும்ப பணிகளையும் செய்வதால், குழந்தைகளுக்கு முறையான உணவளிக்கக நேரம் ஒதுக்க முடியாமல் இருப்பதும் ஒரு காரணம் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.


ஆய்வு  மேற்கொண்ட 92 நாடுகளில், ஜீரோ உணவு இல்லாத குழந்தைகளில் 99 சதவீதத்திற்கும் அதிகமானோர் தாய்ப்பால் பெற்றுள்ளனர். கிட்டத்தட்ட  குழந்தைகளும் உணவு இல்லாமல் இருந்த 24 மணி நேர இடைவெளியில் தாய்ப்பாலை பெற்றுள்ளனர். ஆனால் ஆறு மாத குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டும் போதாது.  தாய்ப்பாலுடன், புரதம், வைட்டமின் நிறைந்த கூடுதல் உணவுகள் வழங்க வேண்டும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  




மேலும் படிக்க


Jharkhand Crime: நாட்டையே உலுக்கிய சம்பவம்! ஸ்பெயின் பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கிய ஜார்க்கண்ட் அரசு!


மீண்டும் ஒரு அதிர்ச்சி! ஜார்க்கண்டில் இளம்பெண்ணுக்கு காரில் நடந்த கொடூரம்! சக கலைஞர்களே இப்படியா?