Breaking News LIVE: மரம் விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு

Breaking News LIVE: நாட்டில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 05 May 2022 04:53 PM
மரத்தை அகற்றியபோது ஆட்டோ மீது விழுந்தது

அம்பாசமுத்திரத்தில் நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிக்காக மரத்தை அகற்றியபோது ஆட்டோ மீது விழுந்து விபத்துக்குள்ளானது

ஆட்டோ மீது மரம் விழுந்து விபத்து- தலா 10 லட்சம் நிவாரணம்

ஆட்டோ மீது மரம் விழுந்து உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

திருச்சியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு : முதலமைச்சர் முக ஸ்டாலின் உரை

திருச்சியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நடத்தும் மாநாட்டில் பங்கேற்று முதலமைச்சர் முக ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். 

வேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் 5 வது நாளாக  உண்ணாவிரதம்.


 தனக்கு 30 நாள் பரோல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருப்பதாகவும், இன்று காலை மயக்கமடைந்ததால் மருத்துவர்கள் சோதனை செய்து வருவதாக வழக்கறிஞர் புகழேந்தி தகவல் தெரிவித்துள்ளார். 

நெல்லை : மரம் விழுந்து 2 பேர் பலி

நெல்லை மாவட்டம்  பத்தமடை அருகே சாலை விரிவாக்கத்திற்காக  ஜே.சி.பி இயந்திரம் மூலம் மரத்தை அகற்றும் போது சாலையில் வந்த ஆட்டோவின் மீது மரம் விழுந்ததில் காதர் மற்றும் ரஹ்மத் என்ற பெண் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலி.

கட்டாய மதமாற்ற புகார் மீது கடும் நடவடிக்கை : தமிழ்நாடு அரசு

கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்ற புகார் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

சேகர் ரெட்டிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு உத்தரவு

தொழிலதிபர் சேகர் ரெட்டி மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கொடநாடு வழக்கில் பிஜின்குட்டி சகோதரிடம் விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 6 வது நபராக குற்றசாட்டப்பட்டுள்ள பிஜின்குட்டி சகோதரர் மோசஸ் என்பவரிடம் கோவை காவலர் பயிற்சி பள்ளியில் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

விழுப்புரம்: ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை

பாலியல் வழக்கில் சிக்கும் ஆசிரியர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஒரு மாதத்தில் பாலியல் வழக்கில் சிக்கிய 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் எப்போதும் இந்த விவகாரத்தில் சமாதானம் போக்கை கடைபிடிக்காது. கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் மோகன் எச்சரிக்கை.

மேட்டூர் அணையின் நீர்வரத்து 5,310 கன அடியில் இருந்து 5,009 கன அடியாக குறைவு..

மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்து வந்த நிலையில் மீண்டும் குறைந்து வருகிறது. நேற்று முன் தினம் அணைக்கு வினாடிக்கு 3,111 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 5,310 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 5,009 கன அடியாக குறைந்துள்ளது.

செஸ் ஒலிம்பியாட் : கலை நிகழ்ச்சிக்கு 8 கோடி நிதி ஒதுக்கீடு

மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடரின் தொடக்க, நிறைவு விழாவிற்கு 8 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு 

காஞ்சிபுரம் : பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்கியது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 518 மாணவ மாணவியர்கள் பன்னிரண்டாம் வகுப்பு முதல் தேர்வு எழுதுகின்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 50 மையங்களில்  மாணவ மாணவிகள் தேர்வு எழுத துவங்கி உள்ளனர். 



காஞ்சிபுரம் மாவட்டத்தில் 165 பறக்கும் படையினர் தேர்வு மையங்களில் அலுவலர்கள் உட்பட்ட 425 பணியாளர்கள் கல்வித்துறை நியமித்துள்ளது.

12 ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது...

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது.

இந்தியாவில் ஒரேநாளில் 3, 275 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் ஒரேநாளில் 3, 275 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கீடு

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்தது ஜப்பான் நிறுவனம்.

Plus 2 Examination : பிளஸ் 2 பொதுத்தேர்வு : முகக்கவசம் கட்டாயமில்லை - சுகாதாரத்துறை அறிவிப்பு

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். 

வெல்டிங் மூலம் நூதன கொள்ளை : ஏடிஎம் - ஐ உடைத்து ரூ. 4.85 லட்சம் அபேஸ்

நாமக்கலை அடுத்த பெருமாள்கோவில் மேட்டில் லஷ்மி விலாஸ் வங்கி ஏடிஎம் எந்திரத்தை வெல்டிங் மூலம் உடைத்து ரூ. 4.85 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

ஐபிஎல் தொடர் : இன்று டெல்லி - ஹைதராபாத் மோதல்

இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி - ஹைதரபாத் அணிகள் நேருக்கு நேர் மோத இருக்கின்றனர். 

முட்டை கொள்முதல் விலை ரூ. 3. 60 ஆக குறைவு

நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 20 காசு குறைந்து ரூ. 3. 60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

பழனியில் இன்று ரோப்கார் சேவை நிறுத்தம்..

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் பராமரிப்பு காரணமாக இன்று ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. 

இன்று தொடங்குகிறது பிளஸ் 2 தேர்வு..

தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 தேர்வு இன்று தொடங்குகிறது : 8.37 லட்ச மாணவ, மாணவியர்கள் எழுதுகின்றனர்.

Background

சென்னையில் இன்று 29 வது நாளாக விலைமாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 110. 85க்கும், டீசல் 100. 94 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.