Breaking News LIVE: பொதுத்தேர்வு ; முகக்கவசம் கட்டாயம் - தமிழ்நாடு அரசு

Breaking News LIVE: நாட்டில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.

கல்யாணி பாண்டியன் Last Updated: 03 May 2022 03:42 PM
பொதுத்தேர்வு ; முகக்கவசம் கட்டாயம் - தமிழ்நாடு அரசு

10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வின்போது மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம் - தமிழ்நாடு அரசு

இலங்கை மக்களுக்கு நிதியுதவி வழங்குங்கள் - முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை

இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் மே 5 -ஆம் தேதி  7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 

இரவில் விசாரணை நடத்தக்கூடாது - தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு..!

சென்னை, திருவண்ணாமலையில் விசாரணை கைதிகள் மரணமடைந்ததையடுத்து, மாலைக்குள் கைதானவர்களை சிறையில் அடைக்க வேண்டும் என்றும் இரவில் விசாரணை நடத்தக்கூடாது என்றும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்

சமஸ்கிருத சர்ச்சை: மருத்துவக்கல்வி இயக்குநர் விசாரணை

மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் சமஸ் கிருத உறுதிமொழி விவகாரத்தில் மருத்துவக்கல்லூரி இயக்குநர் நாராயணபாபு காத்திருப்போர் பட்டியலில் உள்ள மருத்துவ கல்லூரி முதல்வர் ரத்தினவேல், தற்போதைய முதல்வரான தனலெட்சுமி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.  


 


 


 


 


 

சின்னக்கலைவாணர் விவேக் சாலை பெயர் பலகை திறப்பு

சென்னையில் மறைந்த நடிகர் விவேக்கின் பெயரில் ‘சின்னக்கலைவாணர் விவேக் சாலை’ பெயர் பலகையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்!

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 3 யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தம். இதனால் மொத்தம் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு. சுமார் 30 ஆயிரம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளதாக தகவல்.


 

பொதுத்தேர்வின்போது தடையற்ற மின்சாரம் வழங்க மின்வாரியம் உத்தரவு..!

10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வின் போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் அனைத்து மண்டல பொறியாளர்களுக்கும் மின்வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 


 


 

இந்தியாவில் ஒரே நாளில் 2,568 பெருக்கு கொரோனா உறுதி.. 20 பேர் பலி

இந்தியாவில் ஒரே நாளில் 2,568 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. 


கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 20 பேர் பலியாகியுள்ளனர். 

Background

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 200 குறைந்து 38,528 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.