Breaking News Live: திரிபுராவின் முதல்வராகிறாரா மாணிக் சஹா?

Breaking News Live Updates: தமிழ்நாடு உள்பட பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், குற்றங்கள் பற்றி செய்திகளை கீழே உடனுக்குடன் காணலாம்.

ABP NADU Last Updated: 14 May 2022 06:15 PM
திரிபுராவின் முதல்வரானார் மாணிக் சஹா

திரிபுரா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மாணிக் சஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

பஞ்சாப்பில் உள்ள மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தரசில் உள்ள குருநானக் தேவ் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர். 

20ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

உதகையில் நடைபெறும் 124வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளதால் 20ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை என்றும், 12ம் வகுப்பு உட்பட அனைத்து கல்வி தேர்வுகளும் வழக்கம்போல் நடைபெறும் என்றும் அம்மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் வரும் 18 ம் தேதி முதல் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டிகள்..!

சென்னையில் செப்டம்பர் 26 ம் தேதி முதல் அக்டோபர் 2 ம் தேதி அவரை WTA உலக மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெற இருக்கிறது. 

டெல்லி தீ விபத்து : 10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 

கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை..!

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்ய தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

பெங்களூரில் அதிகாலை ஒலிபெருக்கி பயன்படுத்த தடையா..?

பெங்களூர் மசூதிகளில் அதிகாலை தொழுகையின்போது ஒலிபெருக்கி பயன்படுத்த முற்றிலும் தவிர்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உதகையில் தொடங்கிய ரோஜா கண்காட்சி..!

கோடை சீசனை முன்னிட்டு உதகமண்டலத்தில் 17 வது ரோஜா கண்காட்சி இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிறது. 

அதிமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!

திருவாரூர் : செம்படவன்காடு கிராமத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி சந்திரபோஸ் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு 

38 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தங்கம் விலை..!

சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 144 குறைந்து 32, 896 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று டெல்லி பயணம்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை 10 மணிக்கு திடீர் பயணமாக சென்னையில் இருந்து டெல்லி செல்ல இருக்கிறார். 

அரசு பேருந்தில் நடத்துனர் அடித்துக் கொலை..!

செங்கல்பட்டை அடுத்த மேல்மருவத்தூரில் அரசு பேருந்தில் ஏற்பட்ட தகராறில்  நடத்துனரை பயணி அடித்து கொன்றார். 

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் 38வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் தொடர்ந்து விலை மாற்றமின்றி விலை விற்கப்படுகிறது. அதன்படி இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110.85 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு மாற்றமின்றி 100.94 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

உலகளவில் 52.02 கோடி பேருக்கு கொரோனா தொற்று

இதுவரை உலகளவில் 52.02 கோடி பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, 47.48 பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல், இதுவரை கொரோனா தொற்றால் 62.68 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 

ஐபிஎல் போட்டி : கொல்கத்தா - ஹைதராபாத் அணிகள் நேருக்கு நேர் மோதல்

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 61 வது போட்டியில் கொல்கத்தா - ஹைதராபாத் அணிகள் நேருக்கு நேர் மோத இருக்கின்றனர். 

Background

டெல்லி வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.