நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. விஜய்க்கு பல்வேறு தரப்பில் இருந்து அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலும் விஜய் தரப்பு அவருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டுக்கொண்ட் நிலையிலும் இந்த பாதுகாப்பை வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


விரைவில் ஆயுதம் ஏந்திய CRPF வீரர்கள் மற்றும் காவல்துறையினர் 3 சுற்றுகளாக 24 மணி நேரமும் அவருக்கு காமாண்டோ பாதுகாப்பு வழங்கவுள்ளனர். ஏற்கனவே, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை Z பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.