மணிப்பூர் மாநிலத்தின் முதலமைச்சராக பிரேன் சிங், சில தினங்களுக்கு முன்பு ராஜினாமா செய்த நிலையில், புதிய முதலமைச்சர் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில், அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் குக்கி மற்றும் மெய்தி இன மக்களிடையே மோதல் நீடித்து வந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த மோதல்களால் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பெண்கள் பலர் வன்கொடுமைக்கும் ஆளாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இதனால், மணிப்பூரில் ஆட்சி செய்த பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசு , சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து வைத்து வந்தன.
குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்:
இந்த தருணத்தில் , கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி மணிப்பூர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார், பிரேன் சிங். இந்நிலையில், இதுவரை புதிய முதலமைச்சர் பாஜக கட்சி சார்பில் யாரும் நியமனம் செய்யப்படவில்லை. இதையடுத்து, மணிப்பூர் மாநிலத்தில் முதலமைச்சர் பதவி இல்லாதது, 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்கிற காலக்கெடுவானது நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் , குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டுவருமாறு, ஆளுநர் பரிந்துரை செய்த நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.
குடியரசுத் தலைவர் முர்மு:
இது தொடர்பாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, “ மணிப்பூர் மாநில ஆளுநரிடம் இருந்து , மணிப்பூர் அரசின் நிலைமை குறித்தான அறிக்கை வந்தது. அதில்,மணிப்பூரில் இந்திய அரசியலமைப்பு சட்ட நெறைமுறையின் படி செயல்படவில்லை என்பது தெரிகிறது. மேலும், குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்துவதற்கான் சூழ்நிலை இருக்கிறது. இதனால், ஆளுநர் பரிந்துரையின் அடிப்படையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 356 விதியின் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்கிறேன் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவலை உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் மோதல்:
மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே மோதல் கலவரமாக மாறி தொடர்ந்து நீடித்து வருகிறது. இது, இந்தியா முழுவதும் பெரிதும் எதிர்ப்பு கிளம்பியது. பிரதமர் மோடி மணிப்பூர் கலவரம் குறித்து பெரிதும் பேசாமல் இருக்கிறார். இன கலவரத்தை தடுக்க முயற்சி செய்யாமல் இருக்கிறார் . அங்கு இருக்கும் பெண்கள் மிகுந்த கொடுமைகளுக்கும், ஆளாகுவதை கண்டு கொள்ளாமல், பாஜக அரசு இருக்கின்றது என எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர்.
அதிருப்தியில் உட்கட்சியினர் ,கூட்டணி கட்சியினர்
இந்நிலையில், சில தினங்களுக்கு பிரேன் சிங் நடவடிக்கைக்கள் காரணமாக, 7 பாஜக எம்.எல்.ஏக்கள் கட்சி மாறப்போவதாக தகவல் வெளியானது. மேலும், கூட்டணி கட்சிகளான ஜேடியூ ( JDU ) மற்றும் தேசிய மக்கள் கட்சி ( NPP )ஆகியவையும் பிரேன் சிங்கிற்கு கொடுத்த ஆதரவையும் திரும்ப பெறுவதாக தெரிவித்தன.
இதனால், கூட்டணி கட்சிகள் ஆதரவை விலக்கி கொண்டது, உட்கட்சி எம்.எல்.ஏக்களே, அதிருப்தியில் இருப்பதன் காரணமாக , நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் தரப்பில் கொண்டு வரபோவதாகவும் தகவல் வெளியானது.
இதைச் சுதாரித்துக் கொண்ட பாஜக தலைமை , பிரேன் சிஙகை ராஜினாமா செய்ய சொல்லி , நிலைமையை சுமூகமாக மாற்றலாம் என திட்டமிட்டது. அதனால், கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி , முதலமைச்சர் பதவையை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், இதுவரை , யாரும் முதலமைச்சராக தேர்வு செய்யப்படவில்லை. இதனால், 6 மாதங்களுக்கு ஒருமுறை சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்கிற விதி பின்பற்றவிடல்லை. இந்த தருணத்தில், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தப்படுவதாக குடியரசுத்தலைவர் அறிவித்துள்ளார்.
படம்: மணிப்பூர் சட்டப்பேரவை தொகுதிகள் வெற்றி நிலவரம்:
மணிப்பூரில் பாஜக , ஆட்சியை அமைக்க உட்கட்சி மற்றும் கூட்டணி கட்சியினரின் ஆதரவு இல்லை என்றும் இதனால், பெரும்பான்மை இல்லாத காரணத்தால், முதல்வரை அமைக்கவில்லை, நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டால், ஒருவேளை எதிர்க்கட்சியிடம் ஆட்சி சென்றுவிடும் என்றும், இதனால் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு சென்றுள்ளது, பாஜக அரசு என்றும் தகவல் தெரிவிக்கின்றன.
இந்த தருணத்தில், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான ( 30க்கு மேல் ) எம்.எல்.ஏ-க்களை தயார் நிலையில் வைத்துக் கொண்டு, பாஜக அரசு ஆட்சி அமைக்க உரிமை கோரலாம் என எதிர்பாக்கப்படுகிறது.