வரும் 2025-26ஆம் கல்வியாண்டில் ரசாயன செயல்முறைப் பொறியியலில் புதிய இளங்கலை அறிவியல் பாடத்திட்டத்தை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது.

Continues below advertisement


சென்னை ஐஐடியில் புது கோர்ஸ்:


ஐஐடி மெட்ராஸ் சான்சிபார் வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த நான்காண்டு முழுநேர இளநிலைப் பட்டப்படிப்பில் இந்தியர்கள் உள்பட அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.


ரசாயனப் பொறியியல் அடிப்படையில் செயல்முறை ஆய்வகப் பணிகள், தொழில்துறை சார்ந்த திட்டங்கள், பல்வேறு துறைகளுக்கு இடையே கற்றலை ஊக்குவிக்கும் விருப்பப் பாடங்கள் என விரிவான பாடத்திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.


படிப்பில் சேர்வதற்கு கடைசி தேதி எப்போது?


உயர்ந்த கல்வித் தரத்துடன், உலகளாவிய முக்கியத்துவத்தை உறுதிசெய்யும் வகையில் சென்னை ஐஐடி, ஐஐடிஎம் சான்சிபார், நிறுவனங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற ஆசிரியக் குழுவால் இப்பாடங்கள் கற்பிக்கப்படும்.


இந்த படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்க 2025  ஜூலை  6 கடைசி நாளாகும். admissions@iitmz.ac.in என்ற இணைய தள முகவரி மூலம் கூடுதல் தகவல்களைப் பெறலாம். மாணவர்கள் admissions.iitmz.ac.in/bscpe என்ற இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம்.


 






உலகம் முழுவதிலும் இருந்து இப்பாடத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களை வரவேற்று பேசிய சென்னை ஐஐடி சான்சிபார் வளாக பொறுப்பு இயக்குநர் பேராசிரியர் பிரீத்தி அகாலயம், "ரசாயனப் பொறியாளர் என்ற முறையில், இப்பாடத்திட்டத்தை கொண்டு வருவது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.


இதையும் படிக்க: TNEA Rank List: 2.41 லட்சம் மாணவர்களுக்கு பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு- காண்பது எப்படி? கலந்தாய்வு எப்போது?


இதையும் படிக்க: TNEA Cutoff: வெளியான தரவரிசை; உயரும் பொறியியல் கட் ஆஃப் மதிப்பெண்கள்- என்ன செய்யணும்? கல்வியாளர்கள் அட்வைஸ்!