கோவாக்சினின் மொத்த வளர்ச்சி செலவு குறித்து ஐ.சி.எம்.ஆர்-க்கு தெரியாது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.


பாரத் பயோடெக் லிமிடெட் தயாரித்த இந்தியாவின் உள்நாட்டு கொரோனா தடுப்பூசியான கோவாக்சினின் மொத்த வளர்ச்சி செலவு குறித்து தங்களுக்கு தெரியாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கூறியுள்ளது.


இதுதொடர்பாக இந்தியா டுடே ஆர்டிஐ மூலம் கேள்வி கேட்டிருந்த நிலையில், தடுப்பூசியை உருவாக்க ஐசிஎம்ஆர் ரூ.35 கோடி பங்களித்திருப்பதாகவும், இலாபங்கள் வரத் தொடங்கும் போது வெறும் 5 சதவீத ராயல்டியைப் பெறும் என்றும் தெரியவந்துள்ளது.


Coronavirus LIVE : கரும்பூஞ்சை நோயால் இதுவரை 4332 பேர் உயிரிழப்பு; 20 ஆயிரம் பேருக்கு சிகிச்சை : மத்திய அரசு


கோவாக்சின் நாட்டின் மிக விலையுயர்ந்த தடுப்பூசிகளில் ஒன்றாகும். தனியார் மருத்துவமனைகளில் கோவாக்சின் விலையை ஒரு டோஸுக்கு ரூ .1,410 என அரசாங்கம் நிர்ணயித்துள்ளது.


 




இந்தியாவில் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்ட சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் கோவிஷீல்ட் மற்றும் ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி ஆகிய இரண்டு தடுப்பூசிகளை விட செலவு அதிகம். பாரத் பயோடெக் அதிக விலையை நியாயப்படுத்தியுள்ளது, தயாரிப்பு மேம்பாடு, உற்பத்தி வசதிகள் மற்றும் மருத்துவ சோதனைகளின் செலவை மீட்க வேண்டும் என்று கூறியுள்ளது.


கோவாக்சின் வளர்ச்சி மற்றும் உற்பத்தி செலவுக்கான பதில்களைக் கண்டறிய, இந்தியா டுடே தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டம் மூலம் ஐசிஎம்ஆரிடம் கேட்டிருந்தது


கோவாக்சின் மேம்பாட்டுக்கான செலவு குறித்த கேள்விக்கு, ஐ.சி.எம்.ஆர், "ஐசிஎம்ஆரால் மதிப்பிடப்பட்ட செலவு ரூ 35 கோடி" என்று கூறியது. ஐ.சி.எம்.ஆர் வளர்ச்சியில் முதலீடு செய்த தொகையின் புள்ளிவிவரங்களை உடனடியாக பகிர்ந்து கொண்டது. ஆனால் வெளிப்படுத்தவில்லை. அதாவது, உள்நாட்டு தடுப்பூசியின் மொத்த வளர்ச்சி செலவு பற்றி தெரியவில்லை.


கோவாக்சினின் வளர்ச்சி செலவை பாரத் பயோடெக் எவ்வளவு பகிர்ந்து கொண்டது என்பது குறித்து, "பாரத் பயோடெக் நிறுவனத்தால் ஏற்படும் செலவு குறித்து ஐசிஎம்ஆர் அறிந்திருக்கவில்லை" என்று ஆர்டிஐ-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.சி.எம்.ஆருக்கு தடுப்பூசியை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்று தெரியவில்லை என்றால், எந்த அடிப்படையில் இந்த திட்டத்திற்கு ரூ .35 கோடி பங்களித்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.


கோவாக்சினிலிருந்து வருவாயின் பங்கு குறித்த கேள்விக்கு, "புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி, பாரத் பயோடெக்  நிறுவனத்தால் ஐசிஎம்ஆருக்கு 5% ராயல்டி வழங்கப்படும்" ஆர்டிஐல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐசிஎம்ஆர் தெரியாது எனக்கூறியுள்ளது உண்மையில் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. 


GM diet: ஒரே வாரத்தில் 7 கிலோ வரை எடை குறைய வேண்டுமா?