GM (General Motors diet) - ஜெனரல் மோட்டார்ஸ் டயட் இது 1987 ல் ஜெனரல் மோட்டார்ஸ் கார்ப் அவர்களால் கண்டறிய பட்டது. இது ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் வேலையாட்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க அறிமுகப்படுத்தப்பட்டது.


இந்த உணவு முறை புத்திசாலித்தனமாக சாப்பிடுவதை பரிந்துரைக்கிறது. எடை குறைக்க வேண்டும் என நினைத்து பட்டினி கிடைப்பதை விட புத்திசாலித்தனமாக சாப்பிடலாம். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொண்டு உடலில் சேர்ந்த கலோரிகளை குறைக்க உதவும். வெறும் 7 நாட்களில் , 6-7 கிலோ வரை எடை குறைய உதவும்.


அசைவ உணவு எடுத்து கொள்பவராக இருந்தாலும், சைவ உணவு எடுத்து கொள்பவராக இருந்தாலும், இந்த டயட் முறையை பின்பற்றலாம்.


                              


முதல் நாள் - இந்த நாள் முழுவதும், மூன்று வேலையும், பழங்களை உணவாக எடுத்து கொள்ளலாம். ஆப்பிள், மாதுளை, முலாம் பழம், ஆரஞ்சு என எந்த பழங்களை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்.


இரண்டாம் நாள் - இந்த நாள் முழுவதும், காய்களை உணவாக எடுத்து கொள்ளலாம். காய்களை சூப், சாலட், வேகவைத்து எடுத்து கொள்வது, என எந்த வைகையில் வேண்டுமாலும் காய்களை எடுத்து கொள்ளலாம்.


மூன்றாம் நாள் - பழங்கள் மற்றும் காய்கள் இரண்டையும் எடுத்து கொள்ளலாம். மூன்றாவது நாளில் தான் கொழுப்பானதை குறைய ஆரம்பிக்கும். அதிக அளவில் கலோரிகள் எரிக்க படும். இதில் இருந்து தான் எடை குறைய ஆரம்பிக்கும்.


நான்காம் நாள் - 8 வாழை பழங்களும், 3 டம்ளர் பாலும் எடுத்து கொள்ள வேண்டும். ஒரு நாள் முழுக்க இது மட்டும் தான் உணவாக எடுத்து கொள்ள வேண்டும்


ஐந்தாம் நாள் - சிக்கன், மீன் , பீப்  என அசைவ உணவுகளையும் 6 தக்காளிகளையும் உணவில் எடுத்து கொள்ளலாம். சைவ உணவு பிரியர்கள் சீஸ், சிவப்பு அரிசி, மற்றும் தக்காளிகளை உணவில் சேர்த்து கொள்ளலாம்.


ஆறாம் நாள் - இறைச்சி / காய்களை எடுத்து கொள்ளலாம் . தக்காளியை தவிர்த்து விடவும்


ஏழாம் நாள் - காய்கள் பழங்கள் எடுத்து கொள்ளலாம்.


அடுத்த நாளில் இருந்து நீங்க எப்போதும் எடுத்து கொள்ளும் உணவுகளை எடுத்து கொள்ளலாம். இப்படி இந்த ஏழு நாட்களில் 7 கிலோ வரை எடை குறைக்க உதவுகிறது. 




இந்த ஏழு நாள் உணவுடன் 6 - 10 கிளாஸ் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலில் நீர் சத்து சம நிலையில் வைக்க உதவும்.


இது நிலையானதா  ? அதாவது உடல் எடை குறைந்த பின் அப்படியே இருக்குமா, டயட் விட்ட பிறகு மீண்டும் எடை கூடுமா என கேள்வி வரும். மீண்டும் எடை கூடுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இதை டயட் எடுத்து எடை குறைந்த பிறகு, சரிவிகித உணவை எடுத்து கொள்வது நல்லது. நீண்ட நாட்களுக்கு இந்த GM டயட் மட்டும் எடுத்து கொள்ள முடியாது. ஆரம்பத்தில் எடை குறைப்பதற்கு இது உதவும். மற்றபடி இந்த ஒரு உணவை மட்டும் கொண்டு முழுமையாக எடை குறைக்க முடியாது. இது உடலில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். இது முழுமையாக எடுத்து கொள்ள வேண்டாம்.