இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் முதலைகள் மற்றும் பாம்புகள் வீடுகள் உள்ள பகுதிகளுக்கு வருவது வாடிக்கையாகி உள்ளது. அண்மையில் கூட குஜராத்தில் பெய்த கனமழையில் அருகில் உள்ள ஆற்றில் இருந்து முதலைகள் குடியிருப்பு பகுதிகள்குள் நுழைந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலானது.
ஹைதராபாத்தில் மழை:
ஆந்திர மாநிலம் ஹைதராபாத் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இச்சூழலில் தான் ஹைதராபாத்தில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதிக்குள் மலைப்பாம்பு ஒன்று நுழைந்தது. இதனைப்பார்த்த அந்த குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அருகில் இருக்கும் பாம்பு பிடி வீரரான ஷகீல் அலிக்கு தகவல் கொடுத்தனர்.
பாம்பை லாவகமாக பிடித்த ஷகீத் அலி:
அங்கு வந்த பாம்பு பிடி வீரர் ஷகீத் அலி மலைப்பாம்பை லாவகமாக பிடித்தார். நீண்ட நேரமாக பயத்தில் இருந்த மக்கள் மலைப்பாம்பு பிடிக்கப்பட்டதால் நிம்மதி பெருமூச்சு விட்டனர். மலைப்பாம்பை ஷகீத் அலி பிடித்தது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க: Thanjavur Power Shutdown: உஷாரய்யா உஷாரு... தஞ்சையில் நாளைக்கு இங்கெல்லாம் மின்தடை இருக்காது உஷாரு!!!
மேலும் படிக்க: மதுரை- பெங்களூர் வந்தே பாரத் ரயில் துவக்க விழாவில் 101 வயது முதியவர் - யார் இவர்?