பீகாரில் வேகமாக காரை ஓட்டியதாக மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சியின் (ராம் விலாஸ்) தலைவருமான சிராக் பாஸ்வானுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வேகமாக செல்லும் கார்களை கண்டறிய பீகாரில் உள்ள சுங்கச்சாவடிகளில் புதிய கருவி நிறுவப்பட்டுள்ளது. 


வேகமாக காரை ஓட்டிய மத்திய அமைச்சர்:


இந்த கருவி மூலம்தான், மத்திய அமைச்சர் பாஸ்வானின் வாகனம் அதிவேகமாகச் சென்றது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அபராதம் செலுத்தும்படி அவருக்கு இ சலான் பிறப்பிக்கப்பட்டது. ஹாஜிபூரில் இருந்து சம்பாரண் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாஸ்வான் பயணம் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.


பீகார் போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்து போலீசார், மோட்டார் வாகன சட்டத்தை மீறியதற்காக மாநிலத்தில் உள்ள 13 சுங்கச்சாவடிகளில் மின் கண்டறிதல் அமைப்பு மூலம் ஒரு வாரத்தில் 9.49 கோடி மதிப்பிலான 16,700 இ-சலான்களை பிறப்பித்துள்ளனர்.


போக்குவரத்து போலீசாரால் பிறப்பிக்கப்பட்ட 16,755 இ-சலான்களில், 9,676 வாகனங்கள் பிற மாநிலங்களில் பதிவுசெய்யப்பட்டவையாகும்.  7,079 வாகனங்கள் பீகாரில் பதிவு செய்யப்பட்டவையாகும். 


தமிழ்நாடு அரசு தொடர்ந்து அதிகரித்து வரும் சாலை விபத்துக்களை குறைக்கவும் சாலை விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து குற்றங்களை வழக்கு பதிவு செய்து அதனால் ஏற்படும் விபத்துக்களை குறைக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியுடன் அதிநவின தொழிற்நுட்ப கருவிகள் நாடு முழுவதும் கொண்டு வரப்பட்டன.


தமிழ்நாட்டில் அபராத  தொகை எவ்வளவு ?


ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் - ஆயிரம் ரூபாய் அபராதம் 


ஒரே வாகனத்தில் மூன்று நபர்கள் சென்றால் - ஆயிரம் ரூபாய் அபராதம் 


ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் -- 5000 அபராதம் 


அதிவேகமாக செல்லும் வாகனங்களுக்கு -- ஆயிரம் ரூபாய் அபராதம் 


இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு டூவீலருக்கு 2000 ரூபாயும் ஃபோர் வீலருக்கு 4 ஆயிரம் ரூபாய் ஆபரணம் விதைக்கப்படும்.


இதையும் படிக்க: Minister Anbil Mahesh: கொள்கையை விட்டுக்கொடுத்து மத்திய அரசிடம் நிதி பெறமாட்டோம்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!