வட இந்தியத் திருமண விழாவில் இசை சத்தத்தால் அரண்ட குதிரை மிதித்து அங்கிருந்தோர் காயமடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இசை சத்தத்தில் அரண்ட மாப்பிள்ளை குதிரை
உத்தரப் பிரதேசம், ஹமிர்பூர் மாவட்டம், மவுதாஹா எனும் பகுதியில் நடந்த திருமண விழாவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வட இந்திய திருமண விழாக்களில் வழக்கமாக மாப்பிள்ளை குதிரையில் ஏற்றி கூட்டி வரப்படும் பாரம்பரிய நிகழ்வு கடைபிடிக்கப்படும் நிலையில், அவ்வாறு அழைத்து வரப்பட்ட குதிரை இசை சத்தத்தால் மிரண்டு கூட்டத்தில் இருந்த மக்கள் மீது ஏறி ஓடியுள்ளது.
வீடியோ வைரல்
இந்நிலையில் இந்தத் திருமணக் கூட்டத்தில் இருந்த எட்டு பேர் குதிரை தாக்கியதில் காயமடைந்துள்ளனர். மேலும் இசை சத்தத்தால் அரண்ட குதிரை, அங்கிருக்கும் டீஜே செய்யும் நபர் போன்றவரை நோக்கி ஓடியும், மக்கள் மீது ஏறியும் தெறித்து ஓடும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
இவ்வீடியோ குறித்து ஒருபுறம் நெட்டிசன்கள் சிரித்து வரும் நிலையில், மறுபுறம் இந்நிகழ்வு சிரிக்க வேண்டிய விஷயம் அல்ல என்றும், மனிதர்களை விலங்குகளை இவ்வாறு துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்