தமிழ்நாடு :
- செஸ் ஒலிம்பியாட் தொடரை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வருகை - 5 அடுக்கு பாதுகாப்பு, சமூக வலைத்தளங்கள் கண்காணிப்பு
- கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கு - பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு
- அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் - பொறியியல் படிப்பு சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஜூலை 29 ஆம் தேதி வரை அவகாசம்
- மாணவிகளுக்கு உடல் மற்றும் மன ரீதியாக இழிசெயல் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
- ஈரோட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை - தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகத்தின் பேரில் 2 பேரிடம் விசாரணை
- எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு - ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்
இந்தியா :
- 5ஜி அலைக்கற்றையை முதல் நாளில் ரூ.1.45 கோடிக்கு ஏலம் கேட்ட நிறுவனங்கள்.. இன்று 2 ஆம் நாள் ஏலம் நடைபெறுகிறது.
- அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று மீண்டும் ஆஜராக சோனியாகாந்திக்கு சம்மன் - டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைது
- கர்நாடகாவில் பாஜக இளைஞரணி தொண்டர் படுகொலை - போராட்டம் தீவிரமடைவதால் பதற்றம்
- காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிப்பது தொடர்பான வழக்கு - ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்
- மாநிலங்களவையில் இருந்து 6 திமுக எம்.பி.க்கள் இடைநீக்கம் - அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்ததாக ஜூலை 29 ஆம் தேதி வரை இடைநீக்கம்
உலகம் :
- சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியேற ரஷ்யா முடிவு
- இங்கிலாந்தில் உச்சமடையும் வெப்பத்தால் ஆறு, குளங்கள் வற்றும் அபாயம்
- ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு
- அமெரிக்காவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு - 3,487 ஆக அதிகரிப்பு
விளையாட்டு :
- செஸ் ஒலிம்பியாட் தீபம் கன்னியாகுமரிக்கு வந்தடைந்தது - நாளை போட்டிகள் தொடங்க உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு
- காமன்வெல்த் போட்டியில் இருந்து காயம் காரணமாக இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா விலகல்
- இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே இன்று கடைசி ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்