கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆலப்புழா மாவட்டத்தின் பல பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதுடன் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல படகுகளை பயன்படுத்துகின்றனர்.





கேரள தலைநகர் திருவனந்தபுரத்திலும் இன்று மழை பெய்தது. வானிலை மையம், நகர் பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. 


வானிலை  மையம் நேற்று இடுக்கி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுத்ததுடன் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்தது. மழை காரணமாக 11 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கன மழை காரணமாக கக்காடு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கண்ணூர் நகரில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வெள்ளம் சூழ்ந்த வழித்தடங்களை மக்கள் பயன்படுத்துவதை தடுக்க தற்காலிக தடுப்புகள் அமைக்கப்பட்டன. 


கோட்டயம் நகரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கோடூர் ஆறு நிரம்பி வழிகிறது. இன்று இம்மாவட்டத்திற்கு வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கேரளா கடற்கரையில் மணிக்கு 40-45 கிலோ மீட்டர் வேகத்தில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.  


மேலும் படிக்க 


DIG Vijayakumar: கோவை டிஐஜி விஜயகுமார் தற்கொலை காரணம் இதுவா? - டிஜிபி சங்கர் ஜிவால் சொன்ன தகவல்..!


பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம்.. திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ் தலைவர் கார்கே!