* தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. முதல் நாளில் 50 சதவீத மாணவர்களும், மறுநாளில் எஞ்சிய 50 சதவீத மாணவர்களும் மாறி மாறி பள்ளிக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


* கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.


* முதல்முறை சட்டப்பேரவையில் பேசும் உறுப்பினர்களின் உரையை கன்னிப்பேச்சு எனச் சொல்லாமல் முதல் பேச்சு அல்லது அறிமுகப்பேச்சு எனக் கூறினால் நாகரிகமாக இருக்கும்’ என பாரதிய ஜனதா கட்சியின் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.


* தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1797 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,94,233ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 210 பேரும், சென்னையில் 198 பேரும், ஈரோட்டில் 156 பேரும், சேலத்தில் 103 பேரும், செங்கல்பட்டில் 108  பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.  


* தமிழகத்திலேயே முதல்முறை பெண் ஒருவராக நியமனம் செய்யப்பட்டவர் மீண்டும் ஓதுவார் பணி கேட்டு முதல் அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


*  ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிய அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி அபுதாபியில் தஞ்சமடைந்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.


* பள்ளிகள் / கல்வி நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டால், வருங்காலங்களில் மோசமான பின்விளைவுகளை இந்த நாடு சந்திக்கும் என்று பொருளியல் வல்லுநரும், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.   


* மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் ஓபிசி வகுப்பினருக்கு 69 சதவீதம் ஒதுக்ககோரிய வழக்கில் வரும் 25ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது.


* இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் நடிகை நதியாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் மனவருத்தத்தில் உள்ளார்.


* உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக 9 நீதிபதிகள்: 26 மாதங்களுக்கு பிறகு கொலிஜியம் பரிந்துரை பட்டியலில் முதல்முறையாக 3 பெண் நீதிபதிள்


* எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆளுநார் பன்வாரி லால் புரோகித்தை சந்திக்கின்றனர். கோடநாடு விவகாரம் மீண்டும் எழுந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.


* அறநிலையத்துறையின் விதிகளை பின்பற்றியே கோயில்களில் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது.


World Photography Day: ‛காஸ்ட்லி’ போட்டோகிராபர் அஜித் குமார்... காதல் மன்னனின் கேமரா காதல்!