காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் வயநாடு மக்களவை தொகுதியின் எம்பியுமான ராகுல் காந்தி தற்போது கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்தச் சுற்றுப்பயணத்தின் போது அவர் தான் பிறந்த மருத்துவமனையில் இருந்த செவிலியர் ராஜம்மாவை சந்தித்து பேசியுள்ளார். 


இந்தச் சந்திப்பு தொடர்பாக கேரளா காங்கிரஸ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ராகுல் காந்தி மற்றும் ராஜம்மா ஆகிய இருவரும் சந்தித்து பேசி கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தச் சந்திப்பிற்கு முன்பாக ராகுல் காந்தியின் கார் அருகே வருவதற்கு ராஜம்மாவை பாதுகாவலர்கள் தடுத்தாக கூறப்படுகிறது. 






இதனால் அந்த வீடியோவில் ராஜம்மா, “அவர் என்னுடைய மகன். நீங்களை அனைவரும் பார்ப்பதற்கு முன்பாக நான்தான் அவரை முதலில் பார்த்தேன்” என்று பாதுகாவலர்களிடம் கூறுகிறார். அதற்கு பின்பு ராகுல்காந்தியின் அறிவுறுத்தலின்படி அவரை சந்திக்கா ராஜம்மா அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ராகுல் காந்தியை சந்தித்த ராஜம்மா அவருக்கு இனிப்புகளை வழங்கி அவருடைய தாய் மற்றும் சகோதரி குறித்து நலம் விசாரித்தார். இதற்கு முன்பாக கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கேரளா வந்த ராகுல் காந்தி ராஜம்மாவை சந்தித்தார். இது தொடர்பாக படங்களை அவர் தன்னுடைய வயநாடு எம்.பி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த படங்கள் மிகவும் வைரலானது. 






1970-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19-ஆம் தேதி ராகுல் காந்தி டெல்லியின் ஹோலி குடும்பநல மருத்துவமனையில் பிறந்தார். அப்போது 23 வயதான ராஜம்மா அங்கு பயிற்சி செவிலியராக பணியாற்றி வந்தார். ராகுல் காந்தி பிறக்கும்போது அங்கு இருந்த மகப்பேறு வார்டில் பணிபுரிந்து வந்தார். இதனால் அவர் பிறந்தவுடன் அவரை முதலில் தூக்கியிருக்கிறார்


மேலும் படிக்க: வாரே வா தோழி வயசான தோழி.. இங்கிலீஷில் அசத்தும் சாலையோர ஸ்வாக் பாட்டி..! (வைரலான வீடியோ)