ஹரியானாவில் கர்னல் மாவட்டம் அமுப்பூர் கிராமத்தைச்  சேர்ந்த ரிக்கி (25) என்ற இளைஞர், பெண் வீட்டாரால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகிக்கப்படுகிறது. 


ரிக்கியும், ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும், காதலித்து  வந்ததாகவும், இதற்கு பெண் வீட்டாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்ததாகவும் ரிக்கி குடும்பத்தினர் குற்றம் சாட்டினார். மேலும், ஆணவக்கொலை செய்த அனைத்துக் குற்றவாளிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறித்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். 


கடந்த, ஜூன் 19ம் தேதி அவரது காதலி தொலைபேசியில்  அழைத்ததாகவும், அப்பெண்ணை சந்திக்க கிளம்பிய அவர் அன்று முதல் வீடு திரும்பவில்லை என்றும் அவரது பெற்றோர்கள் புகார் மனுவில் தெரிவித்தனர். இதனையடுத்து, காணாமல் போன ரிக்கியை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இந்நிலையில், ஆறு நாட்களுக்குப் பிறகு சோனிபட் நகரில் உள்ள கால்வாயில், கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. பின்னர், இது காணாமல் போன ரிக்கியின் உடல் என்று அடையாளம் காணப்பட்டது. அறியப்படாத நபர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கர்னல் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால், இது ஆணவக்கொலை என்று இளைஞரின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.


இஸ்லாமிய பெண்ணை காதலித்த தலித் இளைஞர்: தலையில் கல்லை போட்டு இருவரையும் கொன்ற தந்தை!


இதற்கிடையே, ரிக்கி நேசித்து வந்த பெண் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டதாக கர்னல் சதர் காவல் நிலைய பொறுப்பாளர் பால்ஜித் சிங் தெரிவித்தார். பெண் வீட்டார் அளித்த புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டம் 376 மற்றும் 306 பிரிவுகளின் கீழ், முன்னதாகவே எஃப்.ஐ.ஆர் ரிக்கி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  


Sexual Harassment: போக்சோ வழக்கில் கைதான தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்! 


காதலித்த வந்த இருவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ஆணவக்கொலை என்பது ஒரு குடும்பத்தின் உறுப்பினரை அவர் குடும்பத்துக்கு இழிவு கொண்டு வந்தார் என்று கருதி அக்குடும்பத்தின் உறுப்பினர்கள் சிலர் கொலை செய்வதைக் குறிக்கிறது. பொதுவாகப் பெண்களையே இப்படிக் கொல்கின்றனர். காதல், மணவிலக்கு, கள்ள உறவு, வன்கொடுமை, முறைபிறழ் புணர்ச்சி, நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை மறுத்தல், குடும்பக் கட்டுப்பாடுகளை மீறல் எனப் பல காரணங்களால் ஆணவக்கொலை நடக்கிறது. ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்ட அறிக்கை ஒன்றின்படி, 5000க்கும் மேற்பட்ட பெண்கள் இவ்வாறு ஆண்டுதோறும் கொல்லப்படுகிறார்கள்