ஜம்மு விமான நிலையத்தின் தொழில் நுட்ப பகுதியில் நள்ளிரவில் இரண்டு முறை குண்டு வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குண்டு வெடிப்பினால் எந்த அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்பது பற்றி தகவல் வெளியாகவில்லை. விமான நிலையத்திற்கு அருகே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் இருந்து வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.






நள்ளிரவில் ஜம்மு விமான நிலையத்தின் மேற்கூரை பகுதியிலும் தொழில் நுட்ப பகுதியிலும் குண்டு வெடித்த சத்தம் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்திற்கு உடனடியாக வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்கள் விரைந்தனர். பாதுகாப்புப் படையினரும் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.