குஜராத்தில் அமைந்துள்ளது மோர்பி. இங்கு மருத்துவ கல்லூரி ஒன்று கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கட்டிடத்தின் முதல் மாடியின் கட்டுமான பணிகளில் சில தொழிலாளர்கள் மேற்கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இடிந்து விழுந்த மேற்கூரை:
நேற்று இரவு 8 மணியளவில் தொழிலாளர்கள் அந்த பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது. திடீரென மேற்கூரை இடிந்து விழுந்ததால் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 4 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். இடிபாடுகளில் சிக்கிய ஒரு தொழிலாளரையும் மீட்பு படையினர் மீட்டனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் உடனடியாக இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு, சிக்கியுள்ள தொழிலாளரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக, மோர்பி தீயணைப்பு மீட்புப்படையினர் தேவேந்திர சிங் ஜடேஜா கூறியதாவது, ”புதியதாக கட்டப்பட்டு வரும் மருத்துவ கல்லூரியின் ஒரு பக்க கூரை இடிந்து விழுந்ததாக நேற்று இரவு 8 மணியளவில் அழைப்பு வந்தது. எங்கள் அணியினர் சம்பவ இடத்திற்குச் இடிபாடுகளில் சிக்கிய 4 வீரர்களை மீட்டனர். ஒருவர் மட்டும் உள்ளே சிக்கியிருந்தார். அவரது முகம் மட்டுமே தெரிந்தது. அவரது முழு உடலும் உள்ளே சிக்கியுள்ளது. அதிகாலை 3 மணியளவில் அவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம்” என்றார்.
விசாரணை:
இடிபாடுகளில் சிக்கியதில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்த கட்டிட ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அப்பகுதி எம்.எல்.ஏ.வான துர்லாப்ஜிபாய் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இந்த விபத்து குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பணியை மேற்கொண்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். காயம் அடைந்த தொழிலாளர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவ கல்லூரி கட்டுமான பணியின்போது மேற்கூரை சரிந்து விழுந்து, இடிபாடுகளில் தொழிலாளர்கள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியது.
மேலும் படிக்க: Crime: ரூ.2000 கோடி போதை பொருள் கடத்தல்: சிக்கினார் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் - அதிரடி கைது!
மேலும் படிக்க: Crime: சேலம் மத்திய சிறையில் திருநங்கைகள் அறைக்குள் சென்றதை தட்டி கேட்டதால் காவலரை தாக்கிய கைதி