பெங்களூரில் பிப்ரவரி 22 முதல் 25 வரை ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.


தலைமை வகிக்கும் இந்தியா:


இந்த வருடத்துக்கான ஜி20 கூட்டத்துக்கு இந்தியா தலைமை வகிக்கிறது. அதையொட்டி முதலாவது  ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள்  கூட்டமானது வரும் பிப்ரவரி 24 முதல் 25 வரை கர்நாடகாவின் பெங்களூரில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்  டாக்டர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் இணைந்து, இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்குகின்றனர்.


இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக 22 பிப்ரவரி 2023 அன்று ஜி20 நிதி மற்றும் மத்திய வங்கி பிரதிநிதிகள் கூட்டம் நடைபெறும்.  இதற்கு பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் அஜய் சேத் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் துணை ஆளுநர் டாக்டர் மைக்கேல் டி. பத்ரா ஆகியோர் தலைமை ஏற்கின்றனர். 


பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான சந்திப்பு:


ஜி20 இந்தியத் தலைமைத்துவத்தின் கீழ் முதலாவது  ஜி20 நிதி அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள்  கூட்டத்தில் ஜி20 உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள். கூட்டத்தில் மொத்தம் 72 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.


முக்கிய உலகப் பொருளாதாரப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான அணுகுமுறைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களிடையே முக்கியத்துவம் வாய்ந்த கருத்துப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்தச் சந்திப்பு  இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







21 ஆம் நூற்றாண்டின் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள பல்வேறு நாடுகளின் வளர்ச்சி வங்கிகளை வலுப்படுத்துதல், நெகிழ்வான, உள்ளடக்கிய மற்றும் நிலையான 'நாளைய நகரங்களுக்கு' நிதியளித்தல், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், நிதி உள்ளடக்கம் மற்றும் உற்பத்தி அதிகரிப்பு போன்றவைகள் இந்த அமர்வில் விவாதிக்கப்படும்.


உலகளாவிய பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் சர்வதேச வரிவிதிப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Also Read: அமெரிக்கா முதல் எகிப்து வரை...அதிக போர் விமானங்களை கொண்ட நாடுகளின் பட்டியல்..இந்தியாவுக்கு எந்த இடம்..!


Also Read: Cheetah: இந்தியாவிற்கு வந்திறங்கிய 12 சிறுத்தைகள்.. குனோ தேசிய பூங்காவில் தீவிர கண்காணிப்பு