பல மாதங்கள் தாமதத்திற்குப் பிறகு, தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிறுத்தைகள் இறுதியாக சனிக்கிழமை மதியம் 12 மணியளவில் மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் (KNP) விடுவிக்கப்பட்டது. இதனை மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் விடுவித்தார். 






இந்தியாவில் சிறுத்தை இனம் அழிந்து 74 ஆண்டுகள் ஆகும் நிலையில், அதன் எண்ணிக்கையை அதிகரிக்க,  நமீபியாவில் இருந்து மத்தியப் பிரதேசத்தின் குனோ-பால்பூர் தேசிய பூங்காவிற்கு முதல் கட்டமாக, 8 சிறுத்தைகள் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது. கடந்தாண்டு செப்டம்பர்,17 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளன்று ஐந்து பெண் மற்றும் மூன்று ஆண் சிறுத்தைகளை வனப்பகுதிக்குள் விடுவித்தார். 


நிலப்பரப்பில் அதி வேகம் ஓடக் கூடிய திறன் பெற்ற சிறுத்தைகள் (cheetahs) ஏற்கனவே இந்தியாவில் இருந்துள்ளது. ஒரு காலத்தில்  இதன் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாக இருந்துள்ளது. ஆங்கிலேயர் வருகையால் வேட்டையாடப்பட்டதன் காரணத்தால் இந்தியாவில் சிறுத்தை இனத்தின் எண்ணிக்கை குறைந்துபோனது. பின்பு, இந்தியாவில் சிறுத்தைகள் இல்லாமலே போனது. தற்போது  ப்ராஜெட்க் டைகர் (’Project Tiger') மூலம் இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தென்னாப்பிரிக்க சிறுத்தைகள் முதலில் மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் விமானப்படை தளத்திற்கு நேற்று காலை வந்தது, அதன்பின்  30 நிமிடங்களுக்குப் பிறகு அவை 165 கிமீ தொலைவில் உள்ள ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள KNP க்கு IAF ஹெலிகாப்டர்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டது.


நேற்று மதியம் 12 மணியளவில் KNP இல் தரையிறங்கியது , அவை அரை மணி நேரத்திற்குப் பிறகு (மதியம் 12.30 மணி) தனிமைப்படுத்தப்பட்ட போமாஸில் (அடைப்புகளில்) வைக்கப்பட்டது. தென்னாப்பிரிக்க சிறுத்தைகளுக்காக 10 தனிமைப்படுத்தப்பட்ட போமாக்களை அமைத்துள்ளதாக KNP இயக்குனர் உத்தம் சர்மா தெரிவித்தார். நேற்று வந்த சிறுத்தைகளுக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக உத்தம் சர்மா கூறியுள்ளார்.  


கடந்த ஆண்டு செப்டம்பர் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் இருந்து ஒரு ஆய்வுக்குழு KNP க்கு வந்து வனவிலங்கு சரணாலயத்தில் சிறுத்தைகளை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளைப் பார்க்க வந்ததாக நிபுணர்கள் தெரிவித்தனர். கடந்த மாதம் பாலூட்டிகளின் இடமாற்றத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே கையெழுத்தானது.


3 ஆயிரம் டாலர்:


தென்னாப்பிரிக்கா இந்த சிறுத்தைகளை இந்தியாவுக்கு வழங்கியுள்ளது. ஆனால், ஒவ்வொரு சிறுத்தைக்கும் இந்தியா 3,000 அமெரிக்க டாலர்களை செலுத்த வேண்டும் என்று வனவிலங்கு நிபுணர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த தென்னாப்பிரிக்க சிறுத்தைகளை விமானத்தில் கொண்டு வர இந்தியா திட்டமிட்டிருந்தது, ஆனால் இரு நாடுகளுக்கும் இடையே முறையான இடமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் தாமதம் ஏற்பட்டதால் சிறுத்தைகள் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. 


இந்த சிறுத்தைகளின் கண்டங்களுக்கு இடையிலான இடமாற்றத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தாமதம் ஏற்பட்டதால், சில நிபுணர்கள் டிசம்பரில் தென்னாப்பிரிக்க சிறுத்தைகளின் ஆரோக்கியம் குறித்து கவலை தெரிவித்தனர், ஏனெனில் இந்த விலங்குகள் கடந்த ஆண்டு ஜூலை 15 முதல் தங்கள் சொந்த நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. நீண்ட தனிமைப்படுத்தலின் விளைவாக, இந்த விலங்குகள் தங்கள் உடற்தகுதியை இழந்திருக்கலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர். இந்த சூழலில் நேற்று 12 சிறுத்தைகளும் பூங்காவில் விடுவிக்கப்பட்டது.