வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி இன்று புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இந்த முழு அடைப்புக்கு ஆதரவாக தனியார் பஸ்கள் ஓடாது என உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக புதுவையில் காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களும் இந்த முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
மத்திய அரசை கண்டித்து 27ஆம் தேதி நடைபெறும் பந்த் - புதுச்சேரியில் 12 இடங்களில் மறியலில் ஈடுபட முடிவு
இதற்காக காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று நகரின் முக்கிய வீதிகளில் வியாபாரிகளை சந்தித்து முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ, டெம்போ ஓட்டுனர்கள் சங்கம், தொழிற்சாலை நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினர்.
புதுவையில் முழு அடைப்பு போராட்டத்தை தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) தனியார் பஸ்கள், ஆட்டோ, டெம்போக்கள் ஓடாது. வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும். புதுச்சேரியில் தனியார் பஸ்களே அதிக அளவில் உள்ளன. அரசு பஸ்கள் குறைந்த எண்ணிக்கையில் தான் இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இதுகுறித்து போக்குவரத்துதுறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, புதுவையில் இன்று அரசு பஸ்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படும் என்றார்.
VCK Thirumavalavan : மோடி அரசே! பதவி விலகு! திருமா ஆவேசம்
தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் பாரதி கண்ணனிடம் கேட்ட போது, புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடத்த அரசியல் கட்சியினர் எங்களிடம் ஆதரவு கேட்டுள்ளனர். எனவே இன்று (திங்கட்கிழமை) புதுவையில் தனியார் பஸ்கள் ஓடாது என்றார்.
பந்த் இன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் காலை 10 மணிக்கு 12 இடங்களில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ள்ளனர். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கிறார்கள். முன்னதாக 23 ஆம் தேதி கிராமப்புறங்களில், 24 மற்றும் 25 ஆம் தேதி நகர் பகுதிகளிலும் பந்த் போராட்ட விளக்க பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடத்தபட்டது.
Annamalai pressmeet : வளைகாப்புதான் முக்கியமா? பிடிஆருக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி
Viral Video: கடல்நீரை உறிஞ்சிய மேகம்..கேமராவில் பதிவான அரிய காட்சி!