Delhi Train Accident: டெல்லியில் பயணிகள் ரயிலில் தீ பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துக்ளகாபாத்தில் இருந்து ஓக்லா சென்ற தாஜ் எக்ஸ்பிரஸில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நல்வாய்ப்பாக பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என வடக்கு ரயில்வே தகவல் வெளியிட்டுள்ளது.


 






சம்பவ இடத்திற்கு 6 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன. யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 


இதுகுறித்து டெல்லி தீயணைப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், "தாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலின் நான்கு பெட்டிகளில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து மாலை 4.24 மணிக்கு எங்களுக்கு அழைப்பு வந்தது. 8 தீயணைப்பு வாகனங்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, தீயை அணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.