கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் காவல் நிலையம் அருகே உள்ள 200-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தீயில் எரிந்து சாம்பலாகியது. அருகே காவல் நிலைய குற்ற வழக்குகளில் பிடிபட்ட 5 இருசக்கர வாகனம் எரிந்து நாசமானது.

சமூக விரோதிகளின் அராஜகம்


கோடை காலங்களில் சமூகவிரோதிகளின் அராஜகம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக  ஒரு சில சமூக விரோதிகள் காய்ந்து கிடக்கும் பகுதிகளில் தீ வைத்து விட்டு செல்வது அதிகரித்து வருகிறது. மறுபுறம் சில சமூக விரோதிகள் சிகரெட்டை பிடித்து விட்டு அவற்றையும்  வீசி செல்வதால் தீ விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கோடை காலங்களில்  காட்டுப் பகுதிகளில் மனிதர்களால் தேவையில்லாமல் தீ விபத்துகள் ஏற்படுகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை  சாலையில் நடைபெற்ற தீ விபத்தில் பனை மரங்கள் எரிந்து நாசமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


 


 



200-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தீயில் எரிந்து சாம்பலாயின


 தீ விபத்தில் சிக்கிய பனைமரம்


செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த பூந்தண்டலம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சதுரங்கப்பட்டினம் காவல் நிலையம்  அருகே 200-க்கும் மேற்பட்ட சுமார் 10 அடி உயரம் கொண்ட பனைமர தோப்பு உள்ளது. அங்கிருந்த பனை மரங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால், 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தீயில் எரிந்து சாம்பலாகின.


 



200-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தீயில் எரிந்து சாம்பலாயின


 


மேலும் அங்கிருந்து பரவிய தீ அருகே காவல் நிலைய  நிலையம் அருகே பரவியது. பல்வேறு குற்ற வழக்குகளில் பிடிபட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் கார், ஆட்டோ, வேன்,  நிறுத்தி வைக்கப்பட்ட இடத்திற்கு தீ பரவியது. தீப்பிடித்து எரிந்ததால் அதன் அருகே இருந்த ஐந்து இருசக்கர வாகனங்களும் தீயில் எரிந்து நாசமாயின .


 


  வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை


பனை மரங்கள் தீப்பிடித்து எறிவது குறித்து தகவல் அறிந்த கல்பாக்கம் மற்றும் திருக்கழுக்குன்றம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். வெயிலின் தாக்கத்தால் மரம் தீப்பற்றி எரிந்ததா ? இல்லை சமூக விரோதிகள் யாராவது தீயை பற்ற வைத்தார்களா  ? என சதுரங்கப்பட்டினம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.'




சமூக ஆர்வலர்கள் கோரிக்கை


கோடைகாலங்களில் இது போன்ற தீ விபத்து ஏற்படாமல் தடுக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  மேலும் தற்பொழுது தீ விபத்தில் சிக்கி வீணாகிய பனைமடத்திற்கு ஈடாக,  ஆயிரத்திற்கும் மேற்பட்ட பண மரங்கள் அந்த பகுதியில் நட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதற்கான முயற்சிகளை அரசு,சமூக ஆர்வலர்களுடன் இணைந்து எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் தீ விபத்தில் சீக்கி, உயிரோடு இருக்கும் மரங்களை  சாகவிடாமல் மீண்டும்  உயிர்பிக்கும் முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.