உத்தரபிரதேச மாநிலம் சம்ஷாபாத் பகுதியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இரவு விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த உறவினர்கள், அப்பகுதி மக்கள் இரவு உணவு விருந்தில் பங்கேற்றனர்.


இரவு உணவு விருந்தில் ரசகுல்லா உள்ளிட்ட இனிப்பு மற்றும் உணவு வகைகள் பரிமாறப்பட்டன. அப்போது, ரசகுல்லா தீர்ந்துவிட்டது. இது குறித்து திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அது கைகலப்பாக மாறியது.  இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். 


இந்நிலையில் இச்சம்பவத்தில் 6 பேருக்கு காயம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழா அரங்கில் இருந்த நாற்காலிகளை தூக்கி ஒருவர் மீது ஒருவர் வீசியெறிந்து கொண்டனர். அதேபோல உணவுத் தட்டுகளை வைத்தும் தாக்கிக் கொண்டனர். 


ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ஷம்சாபாத் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக  PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஷம்சாபாத் காவல் நிலைய எஸ்எச்ஓ அனில் ஷர்மா கூறுகையில், "இந்த சம்பவத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டனர்" என்றார்.இனிப்புப் பொருளின் பற்றாக்குறை குறித்து யாரோ ஒருவர் கருத்து தெரிவித்ததால் சண்டை தொடங்கியது என்றார். 


முன்னதாக உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் திருமண விழா ஒன்றில் ரசகுல்லா பரிமாறப்படவில்லை என கூறி மோதல் எழுந்தது. இந்த மோதலின் இறுதியில் 22 வயது இளைஞர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் காயமடைந்தனர். ஆக்ரா அருகே உள்ள எட்மத்பூர் பகுதியை சேர்ந்த இஸ்மான் அஹமது என்பவரின் இரண்டு மகள்களுக்கும், வகார் அஹமது என்பவரின் இரண்டு மகன்களுக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது, பந்தியில் விருந்தினர்கள் சிலருக்கு ரசகுல்லா பரிமாறப்படவில்லை என தெரிகிறது.


இதனால் எழுந்த வாக்குவாதத்தில்இருவீட்டார் தரப்பிலும் உள்ள இளைஞர்கள் வன்முறையில் இறங்கினர்.விழா அரங்கில் இருந்த நாற்காலிகளை தூக்கி ஒருவர் மீது ஒருவர் வீசியெறிந்து கொண்டனர். இந்த மோதலின்போது 22 வயது இளைஞர் உயிரிழந்தார்.


மேலும் படிக்க


SS Badrinath Demise: சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனர் காலமானார்.. யார் இந்த எஸ்.எஸ். பத்ரிநாத்?


‘NIA-விற்கு பதில் ATS - தீவிரவாத தடுப்பிற்கு தனி பிரிவு’ அதிரடியாக உருவாக்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!


Mansoor Ali Khan: சினிமாவில் ரேப் சீன் என்றால் உண்மையாக ரேப் செய்வதா? 4 மணிநேரம் கெடு - கொந்தளித்த மன்சூர் அலிகான்