கர்நாடகாவில் கடல் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட விவசாயியின் மகள் யூபிஎஸ்சி தேர்வில் வெற்றிப்பெற்றுள்ளார்.



தந்தை தூக்கிட்டு தற்கொலை:


கர்நாடக மாநிலம்  தும்கூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருணா. இவரது தந்தை ஒரு விவசாயி . ஐந்து சகோதர சகோதரிகளுடன் பிறந்த அருணா பொறியியல் பட்டதாரி. ஐந்து குழந்தைகளையும்  படிக்க வைத்த அருணாவின் தந்தை அந்த கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் கடந்த 2009-ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்




5 முறை தோல்வி :


படித்த படிப்பிற்கு  10,000 முதல் 15,000 வரை சம்பளம் கிடைக்கும் வேலை  இருந்தால் போதும் என இருந்த அருணாவிற்கு தந்தை மரணம் மிகுந்த பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. தனது அப்பாவை போல வேறு யாரும் கடன் தொல்லையால் உயிரிழக்கக்கூடாது என எண்ணிய அருணா குடிமைப்பணி தேர்வுக்கு தயாராக தொடங்கினார். அருணாவிற்கு வெற்றிக்கனி அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. அவரும் தனது முயற்சியை விடுவதாக தெரியவில்லை. எனென்றால் அவர் அரசு வேலை பெற வேண்டும் என்பதுதான் அருணா அப்பாவின் கனவாக இருந்தது. ஐந்து முறை தேர்வெழுதிய அருணா தோல்வியடைந்தார். ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆறாவதாக எழுதிய தேர்வில் அருணா அகில இந்திய ரேங்க் பட்டியலில் 308வது இடத்தை பிடித்தார்.



அருணா அகாடமி :


அருணா தொடர்ந்து தோல்வியை தழுவினாலும் கூட யூபிஎஸ்சி தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சியும் அளித்துக்கொண்டு தானும் படிக்க துவங்கியிருக்கிறார். அதற்காக அவர் தொடங்கியதுதான் அருணா அகாடமி. பெங்களூருவில் அமைந்துள்ள இந்த நிறுவனம் மூலம் அருணா கிராமப்புற இளைஞர்களுக்கான பயிற்சிகளை வழங்கி அவர்களை ஊக்குவிக்கிறார்.




ரிசர்வேஷன் கோட்டா வேண்டாம் ! 


அருணா பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர். அவருக்கு ரிசர்வேஷனில் வாய்ப்பு இருந்தும் அவர் , unreserved பிரிவின் கீழே தேர்வுகளை எழுத விரும்பியதாக தெரிவிக்கிறார்.தனது தந்தையை மறைவு அருணாவை புதிய குறிக்கோளை நோக்கி நகர்த்தியுள்ளது. அது விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்பதுதான்.


அருணாவின் கனவு :


என் தந்தையின் கனவு இப்போது நினவாகியுள்ளது,  எனது தந்தையைப் போல தற்கொலை முயற்சியில் ஈடுபட விடாமல், எனது நாட்டின் விவசாயிகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதுதான் என் கனவு அதனை நோக்கி பயணிப்பேன். எனது குடும்பம் எனக்கான  கல்வியை அளித்து என்னை ஒரு சுதந்திரமான பெண்ணாக மாற்றியது, எனவே என்னை விட பின்தங்கிய மற்ற விவசாயிகளின் குழந்தைகளுக்கு இடஒதுக்கீட்டைப் பயன்படுத்திக் கொள்ள வழி வகுக்க வேண்டும். இதுதான் என் கனவு என அருணா மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.