வீட்டின் ஏசி வெடித்து விபத்துக்குள்ளானதில் கர்நாடகாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகா மாநிலம் விஜயநகர மாவட்டத்தில் உள்ள மரியமானஹள்ளி கிராமத்தில் வசித்தவர் வெங்கட் பிரசாத். 42 வயதான வெங்கட் பிரசாத்திற்கு சந்திரகலா என்ற மனைவியும், ஆத்விக், பிரேர்னா என்ற குழந்தைகளும் இருந்தனர். அவர் தனது மனைவி சந்திரகலாவுக்கு 38 வயதும், மகன் ஆத்விக்கிற்கு 6 வயதும், மகள் பிரேரனாவிற்கு 8 வயதும் ஆகிறது. ஆகியோருடன் வீட்டில் வியாழக்கிழமை இரவு தூங்கினார். இவர்கள் அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று பின்னிரவு 12.40 மணிக்கு இவர்கள் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டின் ஏசி ஷார்ட் சர்க்யூட் ஆகி வெடித்துள்ளது. இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்ததுடன், அறைகளில் புகை சூழ்ந்தது. அத்துடன் ஏசியிலிருந்து விஷவாயு கசிந்து அறை முழுவதும் பரவியுள்ளது.
இதில் சிக்கி, வெங்கட் பிரசாந்த், அவருடைய மனைவி லட்சுமி மற்றும் 2 குழந்தைகள் ஆகிய 4 பேரும் உயிரிழந்தனர். போலீஸாரும், தீயணைப்பு படை யினரும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 4 பேரின் சடலங்களும் கைப் பற்றப்பட்டு, விஜயநகர் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். வெங்கட் குடும்பத்திற்கு ஏதேனும் கடன் தொல்லை போன்ற பிரச்சனைகள் உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் கோடைக்காலம் நிலவிவரும் நிலையில், சில இடங்களில் இதுபோன்ற ஏசி விபத்துகள் ஏற்படுவது காணப்படுகிறது. வீட்டில் நிகழும் ஏசி விபத்துகளை தவிர்க்க நிபுணர்கள் பொதுவான சில முன்னெச்சரிக்கை வழிகாட்டுதலை கூறியுள்ளனர்.
- மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஏசியை செக் செய்து முறையாக சர்வீஸ் செய்வது அவசியம்.
- மின் சப்ளை செய்யும் வையர்கள் முறையான, தேவையான தடிமனுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- அளவு குறைவான தடிமன் கொண்ட வையர்கள் எரிந்துவிடும் அபாயம் கொண்டவை.
- ஏசியின் பவர் சப்ளைக்கு அலுமினியம் வையர்கள் பயன்படுத்துவதை தவிக்க வேண்டும். காப்பர் வையர்களை பயன்படுத்துவதே முறையாகும்.
- வின்டோ மற்றும் ஸ்பில்ட் ஏசி பயன்படுத்துபவர்கள், அதன் பில்டர்களை ரெகுலராக சுத்தம் செய்ய வேண்டும்.
- பில்டர்களை நீண்ட நாட்கள் சுத்தம் செய்யவில்லை என்றால் வெப்பம் அதிகரித்து ஸ்பார்க் ஏற்படும் அபாயம் உள்ளது.
- ஏசியின் நியூட்ரல் மற்றும் பேஸ் கனெக்ஷன்கள் டைட்டாக பிளக்கில் சொருகப்பட்டிருக்க வேண்டும்.
- ஏக்ஸ்டென்ஷன் பாக்ஸில் ஏசி பிளக்கை ஒருபோதும் கனெக்ட் செய்து பயன்படுத்தவே கூடாது.