உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலக டிவிட்டர் பக்கம் திடீரென ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் ஆளும் பாஜக இரண்டாவது முறையாக வெற்றிப்பெற்று ஆட்சியமைத்தது. யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.


இந்நிலையில், முதலமைச்சரின் அலுவலக டிவிட்டர் பக்கம் நேற்று (வெள்ளிக்கிழமை) மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது. டிவிட்டர் தளங்களை சர்வதேச அளவில் இந்த வகை ஹே க்கர்கள் அடிக்கடி ஹேக் செய்வதுண்டு.


இதன் தொடர்ச்சியாக இன்று முதலமைச்சரின் அலுவலக டிவிட்டர் பக்கதில் THE BORED APE YACHT CLUB-ன் புகைப்படங்கள் பகிரப்பட்டன. கார்டுன் குரங்கின் படம் புரஃபைல் படமாகவும் வைக்கப்பட்டது.






இதனையடுத்து அச்சுறுத்தும் விதமாக சில டிவிட்டகளையும் ஹேக்கர்கள் பகிர்ந்திருந்தனர். இறுதியாக நீண்ட போராட்டத்திற்கு பின்னர் ஏறத்தாழ 40 லட்சம் பின்தொடர்பாளரை கொண்ட யோகியின் அலுவலக டிவிட்டர் கணக்கு மீட்கப்பட்டது.


ஹேக் செய்யப்பட்ட சில மணி நேரங்களில் டிவிட்டர் கணக்க மீட்கப்பட்டாலும் கூட இதற்கு இடைப்பட்ட நேரங்களில் சுமார் 250 ட்வீட்கள் பதிவிடப்பட்டிருந்தன. பின்னர் இவையனைத்தும் கணக்கிலிருந்து டெலீட் செய்யப்பட்டன.






பொதுவாக பாதுகாப்பில்லாத மூன்றாம் தர இணையதளங்களை பயன்படுத்தும் போதும், அதிலிருந்து எவற்றையேனும் தரவிறக்கம் செய்யும் பொதும் ஒரு வகை ‘மால்வேர்’ வைரஸ்கள் நாம் பயன்படுத்தும் கணினிக்குள் புகுந்துவிடும்.


பின்னர் இது நாம் பயன்படுத்தும் பயன்பாட்டு பெயர் மற்றும் கடவு சொற்களை திருடி பின்னர் அவற்றை சம்பந்தப்பட்ட நபர்களுக்க அனுப்பிவிடும்.


இதன் தொடர்ச்சியாகவே ஹேக்கிங் நடைபெறுகிறது. மேலும், தொடர்பில்லாத சில ட்விட்களையும் ஹேக்கர்கள் பயனாளர்களின் கணக்கில் பகிர்வதுண்டு.


முன்னதாக கடந்த வியாழக்கிழமை தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசினுடைய சுமார் 600 சமூக வலைத்தளங்கள் ஹேக் செய்யப்பட்டது என நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.


ஏற்கெனவே, கடந்த பிப்ரவரியில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.