இலவச லேப்டாப்:


சமூக வலைதளங்களில், இலவச லேப்டாப் வழங்கப்படும் என தகவல்கள் பரவி வந்தது. அதில், இந்த லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும் என்று தகவல் பரவி வந்தது.


அதில், இந்த லிங்க்கை கிளிக் செய்தவுடன், பெயர், கல்வி தகுதி, வயது உள்ளிட்ட தகவல்கள் கேட்கப்படுகின்றன. இதை பூர்த்தி செய்தால், இலவச லேப்டாப் வழங்கப்படும் என்ற தகவல் பரவி வந்தது. 


போலியான தகவல்:


இந்நிலையில் ,இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், அரசின் கவனத்திற்கு சென்றது. இது குறித்து மத்திய அரசின் செய்தி நிறுவனமான பிஐபி ஃபேக்ட் செக் செய்தி வெளியிட்டுள்ளது.




அதில் தெரிவித்துள்ளதாவது, இந்த லிங்க்கை கிளிக் செய்தால், இலவச லேப்டாப் வழங்கப்படும் என்ற செய்தி தவறானதாகும். இது போன்ற செய்திகளை, உங்கள் சுய விவரங்களை தெரிவிக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.


மேலும், இது போன்ற செய்தி குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும் தெரிவித்துள்ளது.




இந்நிலையில், பலரும் இந்த தகவலை சமூக வலைதளங்களில் பகிர்ந்து எச்சரித்து வருகின்றனர்,


Also Read: Whatsapp New Feature: ஃபைல் வேண்டாம் ஃபோட்டோவே போதும்.. வாட்ஸ்-அப் கொண்டுவரப்போகும் அசத்தல் அப்டேட்…


Also Read: WhatsApp New Feature : என்னது! இனி வாய்ஸ் மெசேஜ்களை வாட்ஸப் ஸ்டேட்டஸாக வைக்கமுடியுமா? விரைவில் வருகிறது புதிய அப்டேட்!..