Crime: அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ரஹோ கிராமத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. யம்செம் மேட்டி என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மியான்மர் எல்லையான திராப் மாவட்டத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 


யார் இந்த யுச்செம் மேட்டி?


2009ஆம் ஆண்டு கொன்சா மேற்கு தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவாக யச்செம் மேட்டி (Yumsen Matey) தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பின்னர், 2015ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த இவர், 2024ஆம் அண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக விருப்பம் தெரிவித்து இருந்தார்.  இந்நிலையில், தான் நேற்று பிற்பகல் 3 மணியளவில் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ யச்செம் மேட்டி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 


அதாவது, நேற்று பிற்பகல் 3 மணியளவில் தனிப்பட்ட விஷயத்திற்காக மியான்மர் எல்லையை ஓட்டி  ரஹோ  கிராமத்திற்கு சென்றபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.இவர் தனது ஆதரவாளர்கள் மூன்று பேருடன் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, காட்டிற்குள் சென்றுக் கொண்டிருந்தபோது, யாரோ ஒருவர் யச்செம் மேட்டியை அணுகி தனியாக  அழைத்து சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அங்கு யச்செம் மேட்டியை  துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.  யச்செம் மேட்டியை கொலை செய்த நபர் மியான்மர் நோக்கி தப்பிச் சென்றாக போலீசார் தெரிவித்தனர். 


சுட்டுக் கொல்லப்பட்ட காங்கிரஸ் முன்னாள் எம்.ஏல்.எ:


இதுகுறித்து போலீசார் கூறுகையில், "காங்கிரஸ் முன்னாள் எம்ஏல்ஏ ரஹோ கிராமத்தில் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.  இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபர் என்.எஸ்.சி.என் - கே.ஓய்.ஏ என்ற அமைப்பைச் சேர்ந்த பயங்கராவாதியாக இருக்கலாம். தாக்குதல் நடத்திய நபரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்" என்றார். 


அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னோட்டமாக தான் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் தேர்தல் கருதப்பட்டது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 3ம் தேதி எண்ணப்பட்ட நிலையில், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.


இது பாஜகவிற்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது. அதேபோல, நாடாளுமன்ற தேர்தலில் வென்று ஹாட்ரிக் முறையாக ஆட்சியை  பிடிக்க வேண்டும் என்று பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அதே நேரத்தில், பாஜகவை வீழ்த்திட வேண்டும் என்ற நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன.  இப்படிப்பட்ட நிலையில்  தான், நேற்று காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. 




மேலும் படிக்க


தேர்தல் தோல்வி எதிரொலி; கமல்நாத் பதவியை பறித்த காங்கிரஸ் - மத்திய பிரதேச அரசியலில் பரபரப்பு


Chennai Metro Train: ”எங்கு சென்றாலும் ரூ.5 மட்டுமே கட்டணம்” - சென்னை மெட்ரோ ரயில்களில் இன்று அதிரடி ஆஃபர்..!