Essential Medicine : அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் 1ஆம் தேதி உயருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 


இந்தியாவில் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளான மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் நிர்ணயம் செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் மருந்து விலையை திருத்தி வருகிறது.  இந்த நிலையில், மூலப்பெருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவினம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் மருந்துகளின் விலையை அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கோரிக்கை வைத்து வந்தது. ‘


நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று அத்தியாவசிய மருந்துகளின் விலையை உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளது. அதன்படி, வலி நிவாரணிகள், தொற்ற நோய் தடுப்பு மருந்துகள், இதய நோய் மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட 800க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலையை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் உயர்த்துவதாக மருந்து நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


மேலும், வருடாந்திர மொத்த விற்பனை விலை குறியீட்டில் (WPI) ஆண்டு மாற்றம் 12.2 சதவீதம் ஆக அதிகரிக்கும் என்று தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) தெரிவித்துள்ளது.  இந்நிலையில் கடந்த ஆண்டு மொத்த விற்பனை விலை குறியீட்டில் 10.7 சதவீதம் ஆக இருந்தது.  இந்த ஆண்டு மருந்து விற்பனை விலை குறியீட்டில் 12 சதவீதத்திற்கு மேல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 


மேலும், சந்தையில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க இதுபோன்று விலை உயர்வு ஆண்டுதோறும் உயர்த்தப்படுவதாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு  800க்கு மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலையை 12 சதவீததிற்கும் அதிகமாக உயர்த்த மருந்து விலை நிர்ணய ஆணையம் திட்டமிட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத  அளவுக்கு இந்த ஆண்டு மருந்து பொருட்களின் விலை 12 சதவீதற்கு அதிகமாக உயர்த்தப்படுகிறது. 


வலி நிவாரணிகள், தொற்ற நோய் தடுப்பு மருந்துகள், இதய நோய் மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட 800க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலையை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் உயருவது என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


Gold loan: அப்படி போடு: நகைக்கடன் தள்ளுபடி திட்டம்: மேலும் ரூ. 1000 கோடி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு அரசு..!


லட்சத்தீவு எம்பி ஃபைசல் தகுதிநீக்கம் ரத்து.. ராகுல்காந்திக்கு வழிகாட்டுகிறதா கேரள உயர்நீதிமன்ற தீர்ப்பு?