சோஷியல் மீடியாவில் பல வைரல் வீடியோக்கள் நம்மைச் சிரிக்கவைக்கும்


ஒரு வாத்தும், புலியும் ஒளிந்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலருக்கும் இது வேடிக்கையாக இருக்கிறது.  46 நொடிகள் ஓடும் இந்த வீடியோவை இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர்.  


அந்த வீடியோவில் நீரில் நீந்தும் வாத்தை பிடிக்க புலி பவ்வியமாக போகிறது. ஆனால் வாத்து புலிக்கு போக்குகாட்டி உள்நீச்சல் அடித்து வேறு பக்கமாக வெளியே வருகிறது. வாத்து ஏமாற்றுவது தெரியாமல் புலி பாவமாக அங்கும் இங்கும் செல்கிறது. இந்த வீடியோவுக்கு பலரும் நகைச்சுவையான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த புலி அதற்கான உணவுடன் விளையாடவில்லை. அந்த உணவுதான் புலியுடன் விளையாடுகிறது.  என ஒருவர் குறிப்பிட்டுள்ளனர். அந்த வாத்தின் தன்னம்பிக்கை சிலிர்க்க வைக்கிறது என சிலர் குறிப்பிட்டுள்ளனர். 


















இதேபோல் கடலில் நடக்கும் மீன் வீடியோ ஒன்றும் சமீபத்தில் வைரலானது. கடந்த பிப்ரவரியில் கடல் ஆராச்சியாளர்கள் டாஸ்மேனியாவின் பிளவுண்ட கடல் பூங்காவின் கடற்பரப்புக்கு அடியே நீருக்குள் இயங்கும் புகைப்படக் கருவியைக் கொண்டு சில காணொளிகளைப் பதிவு செய்துள்ளனர். அந்த காட்சிகளைப் பார்க்கும்போது இந்த பிங்க் நிற மீன்கள், தங்களது சிறிய கரங்களுடன் அடியில் வாழ்ந்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண  


மேலும் படிக்க: உலக அளவில் youtube தளத்தில் முதலிடம் பிடித்த சமந்தா பாடல்- விரைவில் 100 மில்லியனை எட்டும்!


Watch Video: Who.. ஓ சொல்றியா மாமா.. க்யூட் குழந்தையின் ஸ்வீட் வெர்ஷன்..