சுகுமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘புஷ்பா’. அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்க , ஃபஹத் வில்லான தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகியிருந்தார். இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும் , படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட் . வெகுநாட்கள் தேக்கி வைத்திருந்த இசை வெள்ளத்தை ஒரே படத்திற்காக மடை திறந்துவிட்டார் போலும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். குறிப்பாக சமந்தாவின் முதல் ஐடம் சாங்கான o solriya oo oo solriya பாடலுக்கு கிடைத்த வரவேற்பு . இதுவரையில் வேறு எந்தவொரு ஐடம் நம்பர் பாடலுக்கும் கிடைக்காத வரவேற்பு.இந்த நிலையில் பிரபல வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப் பக்கத்தில் ஓ அண்டவா மாமா ஓஒ அண்டவா மாமா பாடல் உலக அளவில் நம்பர் 1 என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. கடந்த சில நாட்களாகவே இந்த பாடல் முதலிடத்தில் உள்ளது. அதே போல புஷ்பா படத்தில் இடம்பிடித்த சாமி சாமி பாடல் மூன்றாவது இடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஓ அண்டவா பாடல் தற்போது தெலுங்கில் 90 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. அதே போல தமிழில் 27 மில்லியன், மலையாளத்தில் 3 மில்லியன், கன்னடத்தில் 10 மில்லியன் , இந்தியில் 16 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. விரைவில் தெலுங்கில் 100 மில்லியன் பாடலை கடக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. லிரிக்கல் வீடியோவிற்கே இவ்வளவு மவுசு என்றால் சமந்தாவின் நடன அசைவுகளோடு  பாடல் வெளியானால் யூடியூபே சும்மா அதிரும் போலிருக்கே!




என்னதான் ஓ அண்டவா பாடல் வரிகள் ஆண்களை இழிவுப்படுத்துவதாக இருக்கிறது என கூறி ஆரம்பத்தில் சில சலசலப்பை சந்தித்தாலும் படத்தின் மெஹா ஹிட்டிற்கு ஆண்கள் முக்கிய பங்காக இருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமந்தா முதலில் இந்த பாடலில் நடனம் ஆடுவதற்கு மறுத்துவிட்டாராம். ஆனால் இயக்குநர் சுகுமார் மற்றொரு நடிகையை காரணம் காட்டிதான் படத்தில் நடனமாடுவதற்கு சமந்தாவை சம்மதிக்க வைத்துள்ளார். சமந்தா இந்த ஒரு பாடலில் நடனமாடுவதற்கு 5 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. சம்பளம் எவ்வள்வு பெற்றால் என்ன அதற்கான கடினை உழைப்பை சமந்தா பாடலுக்காக செய்திருக்கிறார் என்கின்றனர் அவரது ரசிகர்கள்.






சமந்தா முன்னணி நடிகையாக இருந்துக்கொண்டு இப்படியான கவர்ச்சி பாடல்களில் ஆடுவது முறைதானா என சில கேள்வி எழுப்பி வந்தனர்.ஆனால் அவர் கவர்ச்சி காட்டுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதற்காகவும் கடினமாக உழைக்க வேண்டும் என தனது ஃபிட்னஸ் சாக்ரஃபைஸ் குறித்து பேசியிருந்தார்.