சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளை கலக்கிக்கொண்டு வரும் திரைப்படங்களில் புஷ்பா திரைப்படமும் ஒன்று. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தானா ஆகியோர் இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் பாடல் ஒன்றுக்கு பிரபல நடிகை சமந்தா நடனம் ஆடியுள்ளார். ஒ சொல்றியா மாமா என்ற அந்தப் பாடல் பட்டி தொட்டி எங்கும் மெகா ஹிட் அடித்துள்ளது. 


இந்நிலையில் இந்தப் பாடலை குழந்தை ஒன்று அழகாகும் பாடும் வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் குழந்தைக்கு தாய் ஒருவர் பாடம் சொல்லி தருகிறார். அப்போது ‘Who’ என்ற ஆங்கில வார்த்தையை அவர் சொல்லி தருகிறார். அந்த வார்த்தையை பார்த்தவுடன் அக்குழந்தை ஓ சொல்றியா மாமா என்ற பாடலை பாடுகிறது. அப்போது அந்த குழந்தை தாய் மீண்டும் அது ஒ அல்ல ‘Who’ என்று மீண்டும் கூறுகிறார். அதன்பின்பும் அக்குழந்தை அந்தப் பாடலை மீண்டும் தொடர்ந்து பாடுகிறது. 






இந்த வீடியோவை அல்லு அர்ஜூனின் ரசிகர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வரை 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். அத்துடம் பலரும் இந்த வீடியோ மிகவும் க்யூட்டாக உள்ளது என்று கூறி தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 


முன்னதாக சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் (டிச.17) உலகமெங்கும் வெளியானது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், கிஷோர், சுனில், அஜய் கோஷ், ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த 8 நாட்களில் மட்டும் இப்படம் புக் மை ஷோ செயலில் 3.5 மில்லியன் டிக்கெட்டுகளை விற்பனை செய்துள்ளது. அதாவது 35 லட்சம் டிக்கெட்டுகள். வசூலிலும் ஏற்கெனவே 100 கோடி பட்டியலில் படம் இணைந்துள்ளது. குறிப்பாக கிறிஸ்துமஸ் தினத்தில் அதிக வசூல் ஈட்டிய திரைப்பட லிஸ்டிலும் இருக்கிறது புஷ்பா. புஷ்பாவின் வெற்றியால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறதாம். 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண  


மேலும் படிக்க: உலக அளவில் youtube தளத்தில் முதலிடம் பிடித்த சமந்தா பாடல்- விரைவில் 100 மில்லியனை எட்டும்!