ஆந்திரா மாநிலத்தில் ஸ்விகி, சோமேட்டோ ஊழியர் போல் மாறுவேடத்தில போதைப்பொருளை விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு போலீசாரால் கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் அவர் அணிந்திருந்த சோமேட்டோ, ஸ்விகி நிறுவனத்தின் ஆடைகள், வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டன.


போதைப்பொருட்கள்:


இரண்டு பேர் இதில் ஈடுபட்டுள்ளதாகவும், ஒருவர் தலைமறைவாக உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக  பெங்களூரு காவல்துறை வெளியிட்ட அறிக்கையின்படி " ஒயிட்ஃபீல்ட் காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் தனிப்படையினர் நடத்திய அதிரடி சோதனையை தொடர்ந்து, பீகாரைச் சேர்ந்த குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் Zomato மற்றும் Swiggy சட்டை அணிந்திருந்தார், மேலும் அவர் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை வைத்திருந்தது கண்டறியப்பட்டது.




மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் உணவு விநியோக நிறுவனங்களிடம் டெலிவரி ஏஜென்டாக முன்பு பணிபுரிந்தார். டெலிவரி வேலையை விட்ட இவர், மாறுவேடத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர்மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பீகாரைச் சேர்ந்த ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருவதாக” அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


உணவு டெலிவரி போல் நடிப்பு:


இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உணவு விநியோக முகவர்கள் போல் நடித்து, கொரோனா காலத்தில் இருந்தே போதைப்பொருளை விற்பனை செய்து வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நபர் கைது செய்யப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. 14 வினாடிகள் கொண்ட வீடியோவில், அந்த நபரிடம் தனது ஸ்விகி பையில் போதைப் பொருட்களை வைத்திருப்பது தெரியவந்தது. உணவு டெலிவரி நிறுவனங்களை போல் போதைப் பொருட்களை விற்பனை செய்யும் சம்பவங்கள் ஏற்கனவே நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் போதைப்பொருட்களுக்கு எதிராக அந்தந்த மாநில காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி தமிழகத்தின் சென்னையில்  போதைப் பொருள் விற்பனையை தடுக்க ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படைகள் கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடத்திய சோதனையில் போதைப் பொருள் விற்பனை செய்ததாக 14 வழக்குகள் பதியப்பட்டு, 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சா, 915 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.




மேலும் படிக்க


Kerala: கேரளா: பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் மசோதா நிறைவேற்றம்..!


Malala: ”எப்பவும் பெத்தவங்க ஆசைப்படி நடந்துக்கணும்னு இல்ல, மலாலா மாதிரி இருங்க..” : உயர்நீதிமன்றம் அறிவுரை