இணையதளத்தில் வீடியோக்கள் வைரலாவது இயல்பு தான். ஆனால் அண்மையில் வைரலாகியுள்ள வீடியோ ஒன்று வேற லெவல் ரகத்தில் இணைந்துள்ளது.
நம்மூரில் தெருச் சண்டை, குழாய் சண்டை, டீக்கடை சண்டை என்று விதவிதமான சண்டைகளைப் பார்த்திருப்போம். ஆனால் இந்த சண்டை வேற ரகம். ஆம் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் தான் சண்டை நடந்துள்ளது. சண்டையில் ஈடுபட்ட நபர்களின் காரசார வாக்குவாதத்தை பதிவு செய்த குசும்பர் ஒருவர் அதை இணையத்தில் வெளியிட்டு நடுவானில் ஒரு தெருச்சண்டை என்று டைட்டிலும் கொடுத்துள்ளார். முதலில் அந்த வீடியோவைப் பார்த்துவிடுங்கள்.
என்னப்பா இது பீட்டர் விடுகிறாரே ரொம்ப பந்தா பார்ட்டி போல என்று கேட்பவர்களுக்கு சப் டைட்டில் நாங்களே போடுகிறோம். அதாகப்பட்டது ஏதோ ஒரு சின்ன விவகாரத்தில் இரண்டு பயணிகளுக்கு இடையே சண்டை மூண்டு விடுகிறது. அதற்கு ஒருவர் உச்ச ஸ்தாயியில், நீ என்னிடம் அப்படி பேசுவதை நிறுத்து. நான் பேசினால் என்னிடம் யாரும் எதிர் பேச்சு பேசியதே இல்லை. என்னை யார் என்று உனக்குத் தெரியாது என்று கத்துகிறார். சிலர் மத்தியஸ்தம் செய்து இருவரையும் சமாதானப்படுத்தப் பார்க்கிறார்கள் ஆனால் பலனில்லை. இருவரும் ஓயவே இல்லை.
பீயிங் ஏவியேட்டர்ஸ் என்ற ட்விட்டர் முகவரி கொண்டவர் இந்த லடாயை பதிவு செய்து ட்விட்டரில் பகிர சும்மா லைக்ஸ் பிச்சிக்குது.
விமானிகள் சண்டை:
இந்த சம்பவத்தில் சண்டை போட்டுக் கொண்டது விமானிகள். முந்தைய சம்பவத்திலாவது பயணிகள் சண்டை போட சக பயணிகள் பொழுதுபோக்கிக் கொண்டு ஊர் வந்து சேர்ந்தனர். ஆனால் நடுவானில் விமானத்தில் அடிதடி சண்டையில் ஈடுபட்ட விமானிகளை விமான நிறுவனம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் இருந்து பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு கடந்த ஜூலை மாதம் ஏர் பிரான்ஸ் விமானம் புறப்பட்டது. விமானத்தை 2 விமானிகள் இயக்கினர். விமானம் ஜெனிவாவில் இருந்து புறப்பட்டு நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமான கேப்டனுக்கும், சக விமானிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு விமானிகளும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.
நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த நிலையில் விமானி அறையில் இருந்து அடிதடி சண்டை சத்தம் கேட்பதை விமான பணியாளர்கள் அறிந்தனர். உடனடியாக, விமானி அறையை திறந்து ஊழியர்கள் உள்ளே சென்ற போது அங்கு விமான கேப்டனும், சக விமானியும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு அடிதடியில் ஈடுபட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, இருவரையும் சமாதான படுத்திய விமான ஊழியர்கள் விமானத்தை பிரச்சினையின்றி இயக்க வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை வராமல் இருக்க விமான பணியாளர் ஒருவர் விமானி அறையிலேயே இருந்தார். பின்னர், பெரும் பரபரப்பிற்கு பிறகு விமானம் பத்திரமாக பாரிசில் தரையிறங்கியது. இந்த சம்பவம் தொடர்பாக ஏர்பிரான்ஸ் விமான நிறுவனம் விசாரணை மேற்கொண்டது. இதையடுத்து 2 விமானிகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் நடந்து 6 மாதங்கள் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோதாதா இணையவாசிகள் அந்த வீடியோவின் கீழ் விதவிதமான கருத்துகளை பகிர்ந்து அலறவிட்டுள்ளனர்.