ஹரியானா பானிபட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் தாய் மற்றும் உறவினர்கள் படுத்து உறங்கிய சமயத்தில், அங்கு உள்ளே நுழைந்த நாய்கள், பிறந்து மூன்று நாள்கள் மட்டுமே ஆன குழந்தையை எடுத்து சென்று கடித்து குதறின.


போலீசார், உயிரிழந்த குழந்தையின் உடலை  உடற் கூறாய்வுக்காக உள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர். இதற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியப்போக்கே காரணம் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இக்குற்றச்சாட்டுக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பதில் அளிக்கப்படவில்லை. 


 






ஜூன் 25 ஆம் தேதி பானிபட்டில் உள்ள ஹார்ட் அண்ட் மதர் கேர் மருத்துவமனையில், அண்டை மாநிலமான உத்தரபிரதேசம் கைரானாவை சேர்ந்த ஷப்னம் என்பவருக்கு குழந்தை பிறந்தது.


மருத்துவமனை பொது வார்டில், தாய் அருகே பச்சிளம் குழந்தை படுத்து உறங்கி கொண்டிருந்தது. அப்போது, குழந்தையின் பாட்டியும் அத்தையும் தூங்கி கொண்டிருந்ததாகவும் அந்த சமயத்தில் யாருக்கும் தெரியாமல் பதுங்கி வந்த நாய்கள் குழந்தையை எடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது. குழந்தை காணாமல் போனது மதியம் 2:15 மணிக்கு தான் தெரிய வந்துள்ளது.


 






தீவிர தேடுதலுக்குப் பிறகு, அருகே உள்ள மைதானத்தில் நாய் ஒன்று குழந்தையை வாயால் பிடித்துக் கொண்டிருப்பதை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையின் உடல் முழுவதும் காயங்கள் இருந்தது. இதையடுத்து, குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


இதையும் படிக்க: டிடிவி தினகரனோடு உறவு; குடும்பத்தை மட்டும் பார்க்கிறார் ஓபிஎஸ்: பரபரப்பை கிளப்பும் உதயகுமார்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண