பெங்களூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது பெலகாவி மாவட்டம். இந்த மாவட்டத்தில் 45 வயதான நபர் ஒருவர் அமைந்துள்ளார். தீவிர கடவுள் பக்தரான அவர் தினமும் காலையில் வீட்டிலே தரிசனம் செய்து தீர்த்தத்தை குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பும் வழக்கம்போல சாமி தரிசனம் முடித்துவிட்டு தீர்த்தத்தை குடித்துள்ளார். தீர்த்தத்தை குடித்த சில மணி நேரங்களில் அவருக்கு வயிறு வலி ஏற்பட்டுள்ளது. உணவும் சாப்பிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, அங்கிருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுத்துள்ளனர். அதைப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எக்ஸ் – ரே படத்தில் அவரது உணவுக்குழாயில் ஏதோ ஒன்றை அடைத்து இருப்பது போல தெரியவந்துள்ளது. அதுவும் குழந்தை வடிவிலான சிலை போல தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அந்த 45 வயது நபருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சையில் அவரது உணவுக்குழாயில் இருந்து கிருஷ்ணர் சிலை இருந்துள்ளது. உடனடியாக அந்த கிருஷ்ணர் சிலை அகற்றப்பட்டு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அந்த கிருஷ்ணர் சிலை 50 கிராம் எடை கொண்டது.
மேலும், சாமி தரிசனம் செய்த பிறகு அவர் தீர்த்தம் குடித்தபோது அந்த தீர்த்தத்தில் கிருஷ்ணர் சிலை தவறிவிழுந்துள்ளது. அதைக் கவனிக்காத அவர் அந்த கிருஷ்ணர் சிலையோடு தீர்த்தத்தை குடித்துள்ளார். அப்போதுதாான் கிருஷ்ணர் சிலை அவரது உணவுக்குழாயில் சிக்கியுள்ளது என்பது தெரியவந்துள்ளது. சாமி தரிசனம் செய்த போது கிருஷ்ணர் சிலையை தீர்த்தத்துடன் விழுங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்று பலரும் பல்வேறு பொருட்களை தெரியாமல் விழுங்குவதும், பின்னர் மருத்துவர்கள் அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதும் நடந்து வருகிறது.
மேஞம் படிக்க : Fastag Viral Video : டிஜிட்டல் வாட்ச் மூலம் ஸ்கேன்! கார் கண்ணாடியை துடைப்பது போல பாஸ்டேக் கொள்ளையா? உண்மை என்ன?
மேலும் படிக்க : ”இதை நீங்க எங்கேயுமே கத்துக்கமுடியாது..” : சிறுதொழில் பெண் நிறுவனரை போற்றி ஆனந்த் மஹிந்திரா போட்ட ட்வீட்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்