குடும்ப மேம்பாட்டிற்காக சுய தொழில் தொடங்கியுள்ள மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த கீதா பட்டீல் எனும் பெண்ணை பாராட்டி டீவீட் செய்துள்ளார் ஆனந்த் மகேந்திரா.
மகேந்திரா மோட்டர்ஸ் மற்றும் வணிக குழுமத்தின் தலைவருமான ஆனந்த் மகேந்திரா எப்போதும் மிகச் சாதாரண மக்கள் தங்கள் வாழ்க்கை மேம்பட முயற்சி செய்யும் விசயங்களை தொடர்ந்து பாராட்டுவதோடும், அதனை தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டு அவர்களை உலகறியச் செய்வார்.
அவ்வகையில் தற்போது மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் முயற்சியினை பாராட்டி டிவீட் செய்துள்ளார். மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த கீதா பட்டீல். இவரது கணவர் சமீபத்தில் வேலையினை இழந்தவர். இதனால் கீதா பட்டீல் தனது குடும்பத்தினை மேம்படுத்தவும், குழந்தைகளின் கல்விக்காகவும் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் பாரம்பரிய தின்பண்டங்களை தானே தயாரித்து விற்று வருகிறார். இந்த கடைக்கு ”பட்டீல் காகி” எனும் பெயரினை வைத்துள்ளார். மகாராஷ்ட்ர முறுக்கு போன்ற கார வகைகள் மற்றும், மகாராஷ்ட்ர இனிப்பு வகைகள் ஆகியவற்றின தந்து பட்டீல் காகியில் தயாரித்து விற்று வருகிறார். இதனை அறிந்த மகேந்திர நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா, இந்த மாதிரியான தொடக்கங்களைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த தொடக்கம் அவரது உறுதியினை காட்டுகிறது. இப்படியான படிப்பினைகளும் உறுதியும் எந்த கல்விக் கூடத்திலும் கற்றுத் தரப்படுவதில்லை, அவை தானாக அவரவர்களுக்குள் தோன்ற வேண்டும் எனவும் ஆனந்த் மகேந்திரா தனது டிவிட்டரில் கூறியுள்ளார். தொழிலதிபர் ஆனந்த் மகேந்திராவின் டிவிட்டர் பதிவை பற்றி தெரிந்து கொண்ட கீதா பட்டில் மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியாக உள்ளனர்.
மகேந்திரா மோட்டர்ஸ் மற்றும் மகேந்திரா வணிக குழுமத்தின் தலைவருமான ஆனந்த் மகேந்திரா ஏற்கனவே இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள தைரியமான மற்றும் புதிய ஐடியாக்களைக் கொண்ட மனிதர்களை தொடர்ந்து பாராட்டியும் ஊக்குவித்தும் வருகிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்