சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்காக காத்திருக்கும் நேரத்தை தவிர்ப்பதற்காக பாஸ்டேக் என்ற நடைமுறையை அறிமுகப்படுத்தியது. சமூக வலைதளங்களில் நேற்று முதல் வீடியோ ஒன்று தீவிரமாக வைரலாகி வருகிறது.


அந்த வீடியோவில், சிக்னல் ஒன்றின் ஓரத்தில் நிற்கும் காரின் கண்ணாடியை சிறுவன் ஒருவன் துடைக்கிறான். அப்போது, அவன் காரின் கண்ணாடியை துடைத்தபோது கையில் கட்டியிருந்த ஸ்மார்ட் வாட்ச்யை பாஸ்டேக் க்யூ ஆர் கோடு அருகே கொண்டு சென்றதும், அந்த ஸ்மார்ட் வாட்ச்சில் சிவப்பு நிற விளக்கு எரிவதையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.அப்போது, அவனிடம் அவன் கையில் உள்ள வாட்ச் பற்றி கேட்டுள்ளனர்.






இதனால், சிறுவன் சற்று பயந்து தடுமாறியுள்ளான். இதனால், சட்டென்று அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடினான். காரில் இருந்த நபர் இறங்கி ஓடி அவனை பிடிக்க முயற்சித்தும் அவன் தப்பி ஓடினான். இந்த சம்பவம் முழுவதையும் வீடியோவாக பதிவு செய்த அந்த நபர் சமூக வலைதளங்களில் இதை வெளியிட்டு, கார் கண்ணாடியை துடைப்பது போல வந்து பாஸ்டேக்கில் இருந்து பணத்தை நூதன முறையில் கொள்ளையடிப்பதாகவும், இரு வாரங்களுக்கு முன்பு இதேபோன்று தங்களுக் நேர்ந்ததாகவும் கூறியுள்ளனர். மேலும், விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.  


குறிப்பாக, மகாராஷ்ட்ரா பகுதியில் செல்லும் லாரி ஓட்டுனர்கள், கார் ஓட்டுனர்கள் தங்களது வாகனத்தை துடைக்க வரும் சிறுவர்களிடம் மிகவும் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 






இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பலரும் இந்த வீடியோ முழுவதும் சித்தரித்து எடுக்கப்பட்டவை என்றும், போலி என்றும் கருத்து தெரிவித்தனர். பின்னர், பாஸ்டேக் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பாஸ்டேக் பணப்பரிவர்த்தனை அங்கீகரிக்கப்பட்ட கருவியில்(டோல்கேட் மற்றும் டோல்ப்ளாசா பார்க்கிங்) மட்டுமே நடைபெறும். அங்கீகரிக்கப்படாத எந்தவொரு கருவியும் பாஸ்டேக் பணப்பரிவர்த்தனையை செய்ய முடியாது. எனவே, பாஸ்டேக் மிகவும் பாதுகாப்பானதே என்று பதில் அளித்துள்ளது. ஆனாலும் இந்த வீடியோ குறித்து உரிய விசாரணை நடத்தி முறையான விளக்கமளிக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண