டெல்லியின் ரோகிணி நகர் பகுதியில் 8-ம் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் எம். ராமகிருஷ்ணன் (80) என்பவர் வசித்து வருகிறார். ஓய்வு பெற்ற என்ஜினீயரான இவர் தனது மனைவியுடன், குர்கானில் வசிக்கும் தன்  மகன் வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் சென்றிருந்தார்.  2 நாட்கள் கழித்து, ராமகிருஷ்ணனின் வீட்டருகே வசிப்பவரிடம் இருந்து ராமகிருஷ்ணனுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.



அவரது வீட்டில் திருடு போனதாக தொலைப்பேசியின் மறுமுனையில் பேசிய நபர் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். உடனடியாக ராமகிருஷ்ணன் வீட்டுக்கு திரும்பியுள்ளார். வீட்டின் நுழைவு வாசலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, எந்த பொருளும் திருடு போகவில்லை என அறிந்து கொண்டார். இதுபற்றி ராமகிருஷ்ணன் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், வீட்டில் பொருட்கள் எதுவும் கொள்ளை போகவில்லை என்றும்  ஆனால், வாசலுக்கு அருகே ரூ.500 நோட்டு ஒன்று கிடந்தது. வீட்டில் விலை மதிப்பிலான பொருட்கள் எதனையும் வைக்கவில்லை. அலமாரியும் உடைக்கப்படாமல் இருந்தது என தெரிவித்து உள்ளார்.

இதையடுத்து வீட்டில் கொள்ளையடிக்க எந்த பொருளும் கிடைக்காத விரக்தியில், திருட வந்தவர்கள் 500 ரூபாய் நோட்டை அங்கு போட்டுச் சென்றது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருட வந்த வீட்டில் திருடுவற்கு எதுவும் சிக்காத நிலையில் திருடர்கள் 500 ரூபாய் நோட்டை போட்டுச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பேசு பொருளாகி உள்ளது. 


முன்னதாக கடந்த ஜூன் மாதம் டெல்லியின் ஷஹ்தராவில் உள்ள பிரஷ் பஜார் பகுதியில் ஒரு வீட்டில் தம்பதியிடம் கொள்ளையடிக்க சென்ற கொள்ளையர்கள் அவர்களிடம் வெறும் 20 ரூபாய் இருந்ததால் அவர்களுக்கு 100 ரூபாய் கொடுத்து விட்டுச் தப்பியோடினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பின்னர் குறைந்தப்பட்சம் 100 கேமராக்களில் இருந்து அந்த காட்சிகளை ஸ்கேன் செய்த போலீசார் அந்த இரண்டு கொள்ளையர்களையும் கைது செய்தனர். 


மேலும் படிக்க, 


National Award to Teachers 2023: கல்லூரி ஆசிரியர்களுக்கும் தேசிய விருது; மத்திய அரசு அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?


Crime: லிவ் இன் பார்ட்னரின் கருவை கலைக்க, மதம் மாற கட்டாயப்படுத்திய காதலன் - உள்ளே தள்ளிய போலீஸ்..!