திருமணம் முடிந்து கணவன் மனைவியாக இருந்தாலும் ஒருவரின் விருப்பம் இல்லாமல் அவரை பாலியல் உறவு கொள்ள வற்புறுத்துவதும் வன்கொடுமையே ஆகும். தங்களது விருப்பத்திற்கு ஏற்றாற்போல பாலியல் உறவின்போது நடந்து கொள்ளச் சொல்வதும் தவறான செயல் ஆகும். டெல்லியில் தற்போது அப்படி ஒரு அதிர வைக்கும் சம்பவம் அரங்கேறி உள்ளது.


ஆபாச படம்:


டெல்லியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வந்தார். இந்த தம்பதியினருக்கு கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்றது முதல் அந்த பெண்ணை அவரது கணவரும், அவரது குடும்பத்தினரும் வரதட்சணை கொடுமை செய்து வந்தனர். இதனால், அந்த பெண் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளார்.


மேலும், அவரது கணவர் செல்போனில் அடிக்கடி ஆபாச படம் பார்க்கும் பழக்கம் உடையவராகவும் இருந்துள்ளார். தனது மனைவியையும் செல்போனில் ஆபாச படம் பார்க்குமாறு கூறியுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனாலும், அவரை கட்டாயப்படுத்தி ஆபாச படம் பார்க்க கட்டாயப்படுத்தியுள்ளார்.


கட்டாயப்படுத்திய கணவன்:


ஆபாச படம் பார்க்குமாறு கட்டாயப்படுத்தியது மட்டுமின்றி, மனைவி என்றும் பாராமல் அவரை ஆபாச படத்தில் வருவது போல ஆடை அணிந்து கொள்ளுமாறும், அதில் வருவதுபோல நடந்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால், அந்த பெண் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.


ஒரு கட்டத்தில் கணவனின் கொடுமை தாங்க முடியாத அந்த பெண் காவல்துறையில் தனக்கு நேர்ந்த கொடுமையை புகாராக அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவரது கணவர் மீது 498 ஏ. 406 மற்றும் 34 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  மேலும், வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.


பாலியல் வன்கொடுமை:


கணவனே மனைவியை ஆபாச படம் பார்க்க வற்புறுத்தியதும், அதில் வரும் ஆபாச பட நடிகை போல நடந்து கொள்ள வற்புறுத்தியதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நாட்டில் சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வித,விதமாக அரங்கேறி வருகிறது. பெரும்பாலும் அவர்களுக்கு நேரும் பாலியல் வன்கொடுமைகள் நன்கு அறிந்த நபர்களாலே நடைபெறுகிறது. இந்த நிலையில், தற்போது கணவன்களே பெண்களை இதுபோன்று விதவிதமான பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்குவது பெரும் வேதனையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: காஞ்சிபுரம் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை; குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் ஏன் ?