உலகின் மிகப்பெரிய 20 நாடுகள் கொண்ட கூட்டமைப்பாக ஜி20 கூட்டமைப்பு உள்ளது. இந்த நிலையில், கடந்தாண்டு இந்தியா தலைமைப் பொறுப்பை பெற்றது. இதையடுத்து, நடப்பாண்டிற்கான ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெறுவதற்காக அறிவிக்கப்பட்டது.


டிராக்டரில் ரோந்து:


இந்த நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜி20 மாநாடு டெல்லியில் நாளை மறுநாள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. ஜி20 மாநாட்டிற்காக இந்தியாவின் முக்கிய நகரங்களில் வெவ்வேறு தலைப்புகளில் கூட்டங்கள் நடைபெற்று வந்தது. அமெரிக்க அதிபர் பைடனுடன், சீனா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கும் மாநாடு என்பதால் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்த நிலையில், டெல்லியில் யமுனா நதிக்கரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், டிராக்டரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஜி20 மாநாடு நடைபெறும் ராஜ்காட் அருகே போலீசார் இந்த ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் ஒருவர் டிராக்டரை ஓட்ட, ஒருவர் அவர் பக்கத்தில் நின்று கொண்டிருக்க மற்றொரு போலீஸ் பின்புறத்தில் டிராக்டரில் நின்று கொண்டுள்ளார்,






ஜி20 மாநாடு நடைபெறும் பகுதியை சுற்றிலும் டெல்லி போலீசாருடன் பல்வேறு பாதுகாப்பு பிரிவினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜி20 நாடுகளின் கூட்டமைப்பில் ஆஸ்திரேலியா, கனடா, சவுதி அரேபியா, அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, அர்ஜெண்டினா, பிரேசில், மெக்சிகோ, ப்ரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, சீனா, இந்தோனேசியா, ஜப்பான், தென்கொரியா நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.


பாதுகாப்பு வளையத்தில் டெல்லி:


டெல்லியில் நடைபெறும் இந்த ஜி20 மாநாட்டில் உறுப்பினர்களான 20 நாடுகள் மட்டுமின்றி 20 நாடுகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். உலகின் தலைவர்கள் எல்லாம் டெல்லியில் கூட உள்ளதால், ஒட்டுமொத்த டெல்லி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் வர இருப்பதால் கடந்த சில வாரங்களாகவே பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மத்திய மற்றும் மாநில பாதுகாப்பு துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


டெல்லியில் நடைபெறும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் பங்கேற்கவில்லை, அவர்களுடைய பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இந்தியா நடப்பு ஜி20 மாநாட்டிற்கு தலைமை வகித்துள்ள நிலையில், அடுத்த ஜி20 மாநாட்டிற்கு பிரேசில் தலைமை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


டெல்லியில் நடைபெற உள்ள இந்த ஜி20 மாநாட்டில் உலகின் கவனிக்கத்தகுந்த இந்த 20 நாடுகள் பல்வேறு பரஸ்பர ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளன. பாதுகாப்பு, தொழில்வளர்ச்சி, ஏற்றுமதி, இறக்குமதி, உணவு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளின் ஒப்பந்தகளும் கையெழுத்தும் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க: Sanatan Dharma Row:”நானும் ஆன்மிகவாதிதான்: நடிகர் வடிவேலு உடன் போட்டி போடுகிறார் மோடி... பிழைத்து போகட்டும்” - சரமாரியாக சாடிய உதயநிதி


மேலும் படிக்க: Kodanad Case: எடப்பாடி பழனிசாமி சேலத்தில் உள்ள முக்கியப்புள்ளி ஒருவரை வைத்து தன்னிடம் பேரம் பேச வந்தார் - தனபால் பேட்டி.